For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

400வது ஒருநாள் போட்டியில் மங்களகரமாக கால் எடுத்து வைத்தார் குமார் சங்ககாரா!

By Veera Kumar

மெல்போர்ன்: இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா இன்று தனது 400வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பையில் இன்று வங்கதேசத்துடன் மோதும் போட்டி இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சங்ககாராவுக்கு 400வது போட்டியாகும். 37 வயதான சங்ககாரா இந்த சாதனையை நிகழ்த்தும் 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டவர்

பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டவர்

2000வது ஆண்டில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக களம் கண்ட சங்ககாரா, இதுவரை 13 ஆயிரத்து 739 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடிவரும் சங்ககாரா 130 போட்டிகளில் 12 ஆயிரத்து 203 ரன்களை குவித்துள்ளார்.

21 செஞ்சுரி

21 செஞ்சுரி

ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களும் விளாசியுள்ளார் சங்ககாரா.

நம்மாளுதாங்க நம்பர் 1

நம்மாளுதாங்க நம்பர் 1

463 போட்டிகளில் விளையாடியதன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலுள்ளார்.

ஜெயசூர்யா

ஜெயசூர்யா

445 போட்டிகளுடன் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 2வது இடத்தில் உள்ளார்.

இலங்கை வீரர்களே..

இலங்கை வீரர்களே..

444 போட்டிகளுடன் மகிலா ஜெயவர்த்தனே 3வது இடத்திலும், 400 போட்டிகளுடன் சங்ககாரா 4வது இடத்திலும் உள்ளனர். இதில் கடைசி இருவரும் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களாகும்.

Story first published: Thursday, February 26, 2015, 12:03 [IST]
Other articles published on Feb 26, 2015
English summary
Sangakkara, on Thursday, became only the 4th player in One Day International history to feature in 400 or more matches. The 37-year-old was today playing his 400th ODI, against Bangladesh in a Pool A match of ICC World Cup 2015 at the iconic Melbourne Cricket Ground (MCG).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X