For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லெஃப்ட் இஸ் ரைட்...! நியூசிலாந்து-ஆஸி. போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் புது சாதனை!

By Veera Kumar

ஆக்லாந்து: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நடுவேயான போட்டியில், இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இணைந்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி புது உலக சாதனை படைத்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆஸ்திரேலியாவின் அந்த சரிவுக்கு காரணம்.

அதேபோல நியூசிலாந்தின் மற்றொரு இடது கை மிதவேகப் பந்து வீச்சாளர் கோரி ஆன்டர்சன் தனது முதலாவது ஓவரில் 6 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் 6 விக்கெட்டுகளை நியூசிலாந்தின் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் இணைந்து வீழ்த்தினர்.

World Cup: Left is right as new world record is set in Auckland

அடுத்ததாக நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர், மிட்சேல் ஸ்டார்க் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளிலும் உள்ள இடது கை வேகப்பந்து இணைந்து மொத்தம் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளது இதுதான் முதல் முறையாகும். இதுதவிர இடது கை சுழல் பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது தனிக்கதையாகும். ஆனால் அது, இந்த சாதனை லிஸ்டில் வராது.

இப்போ சொல்லுங்க, லெஃப்ட் இஸ் ரைட்தானே..

Story first published: Saturday, February 28, 2015, 14:03 [IST]
Other articles published on Feb 28, 2015
English summary
Left was right at Eden Park here today as a low-scoring thriller was witnessed between Australia and New Zealand in a World Cup 2015 Pool A match. Three left-handers combined to set a new world record in One Day Internationals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X