For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி-20 உலகக் கோப்பை: டோணி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு- ஹோக்லி, யுவி, அஸ்வின், ஷமிக்கு இடம்!

By Mathi

டெல்லி: ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை டி-20 போட்டிகளுக்கு டோணி தலைமையிலான 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் விராத் கோஹ்லி, யுவராஜ்சிங், ரோஹித் ஷர்மா, ஜடேஜா, ஷிகர் தவான், அஸ்வின், ஹர்பஜன்சிங், முகமது ஷமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி 20 தொடர் பிப்ரவரி 24-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணியும் கலந்துகொள்கிறது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை 6-வது உலகக் கோப்பை டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்த இரு போட்டிகளுக்குமான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு இடம்

யார் யாருக்கு இடம்

இந்திய அணி வீரர்கள் விவரம்: டோணி, கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆசிஷ் நெக்ரா, ஹர்பஜன்சிங், பவான் நெகி, முகமது ஷமி.

மீண்டும் கோஹ்லி

மீண்டும் கோஹ்லி

இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை டி20 போட்டிகளில் மீண்டும் ஹோக்லி இடம்பிடித்துள்ளார்.

ஷமிக்கும் இடம்

ஷமிக்கும் இடம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தசைநார் முறிவு காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தொடரில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு பதிலாக டி20 தொடரில் பும்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஷமி மற்றும் பும்ரா இருவருமே ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை சாம்பியன்கள்

இதுவரை சாம்பியன்கள்

டி20 உலகக் கோப்பை போட்டியில் 2007 ஆம் ஆண்டு இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தன.

இந்திய அணி வலிமை

இந்திய அணி வலிமை

இந்திய அணியைப் பொறுத்தவரையில் முதலாவது டி20 உலகக் கோப்பையில் அதாவது 2007-ல் சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது. 28 உலகக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணி 18-ல் வென்றுள்ளது. 9-ல் தோல்வியைத் தழுவியுள்ளது.

பாகிஸ்தானுடன் மோதல்

பாகிஸ்தானுடன் மோதல்

உலகக் கோப்பை டி20 போட்டிகளில் எந்த ஒரு அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்தியா முழுவதும் 7 நகரங்களில் உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. தர்மசாலாவில் பரம எதிரியான பாகிஸ்தானை மார்ச் 19-ந் தேதி இந்திய அணி எதிர்கொள்கிறது.

Story first published: Friday, February 5, 2016, 14:32 [IST]
Other articles published on Feb 5, 2016
English summary
Mahendra Singh Dhoni will lead India at the World Twenty20 for the 6th edition in a row as he was today (February 5) chosen as the captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X