For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வெற்றியும், டோணியின் 'அந்த இரு' மின்னல் ஓட்டங்களும்!

By Veera Kumar

பெங்களூர்: இந்தியா-வங்கதேசம் நடுவேயான உலக கோப்பை டி20 சூப்பர்-10 சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைக்க, டோணி ஓடிய 2 மின்னல் வேக ஓட்டங்கள் காரணம்.

டாசில் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, வங்கதேசத்தின் துல்லிய பந்து வீச்சால் ரன் குவிக்க திணறியது. 20 ஓவர்கள் இறுதியில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இரண்டாவது பேட் செய்த வங்கதேச அணி 18வது ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த இரு ஓவர்களுக்கு, 17 ரன்கள் எடுத்தால் போதும் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது.

பவுண்டரி

பவுண்டரி

இருப்பினும் 19வது ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால், கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இளம் வீரர் பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் சிங்கிள் ரன் சேர்க்கப்பட்டது. 2வது பந்தை ரஹிம் ஆப்-சைடில் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த 4 பந்துகளில் ஆறே ரன்கள்தான் தேவை என்ற நிலை உருவானது.

ஒரு ரன் போதும்

ஒரு ரன் போதும்

அந்த ஓவரின் 3வது பந்தை பாண்ட்யா வீச, அதை ரஹிம் லெக் சைடில் திருப்ப, அந்த பந்தும் பவுண்டரிக்கு விரைந்தது. முதல் மூன்று பந்துகளில் 9 ரன்களை சேர்த்தது வங்கதேசம். ஆட்டத்தின் கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் போதும், வெற்றி வங்கதேசத்துக்கு என்ற நிலை ஏற்பட்டது. ஒரு ரன் எடுத்தாலும் போதும், ஆட்டம் டிராவாகிவிடும்.

அடுத்தடுத்து கேட்சுகள்

அடுத்தடுத்து கேட்சுகள்

ஆனால், பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் சரிந்தது. 4வது பந்தை ரஹீம் லெக் சைடில் இழுத்து சுற்ற, எல்லை கோடு அருகே நின்ற தவான் கையில் அருமையாக சென்று சேர்ந்தது அந்த பந்து. எனவே, எஞ்சிய 2 பந்துகளுக்கு 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில், மஹ்மதுல்லா சிக்சர் அடிக்கும் வெறியில் பந்தை தூக்கி அடித்தார். அதை ரவீந்திர ஜடேஜா கேட்சாக மாற்றினார்.

கடைசி பந்து

கடைசி பந்து

கடைசி பந்தை சுவகடா சந்தித்தார். 2 ரன்கள் எடுத்தால் வெற்றியும், 1 ரன் அடித்தால் டிராவும் ஆகும் நிலை இருந்தது. டிரா ஆனால், அது, சூப்பர் ஓவருக்கு வழி வகுத்துவிடும் என்பதால், ஃபீல்டர்கள் அத்தனை பேரும் இன்னர் சர்க்கிளுக்கு உள்ளே நிறுத்தப்பட்டனர்.

டோணி ரெடி

டோணி ரெடி

ஆட்டத்தின் கடைசி பந்தை பாண்ட்யா ஆப் சைட் திசையில் பிட்ச் செய்து, சற்று வைடாக வீசினார். சுவகடா அதை எகிறி அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல், கிளவுசை கழற்றி வைத்து ரெடியாக நின்ற, விக்கெட் கீப்பர் டோணியிடம் சென்றது.

பதம் பார்த்த டோணி

பதம் பார்த்த டோணி

ஒரு ரன் ஓடிவிட்டால் போட்டி டிராவாகிவிடும் என்பதால், எதிர்முனையில் நின்ற முஸ்தபிசுர் அதிவேகமாக ஓட ஆரம்பித்தார். இதையடுத்து சுவகடாவும், பவுலர் என்ட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். ஆனால் டோணியோ, பந்தை ஸ்டெம்பை நோக்கி எரிந்தால் கூட படாமல் செல்ல வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பந்தை கையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து ஸ்டம்பை பதம் பார்த்தார்.

மின்னல் வேக ஓட்டம்

மின்னல் வேக ஓட்டம்

பாண்ட்யா பந்தை வீசும்போதே முஸ்தபிசுர் கிரீசை விட்டு ஓரளவுக்கு வெளியே ஓடி வந்திருந்தார். ஆனால் டோணியோ, பந்தை லாவகமாக பிடித்த பிறகே ஸ்டம்பை நோக்கி ஓடத்தொடங்கினார். அப்படியிருந்தும், டோணியின் மின்னல் வேக ஓட்டத்திற்கு முஸ்தபிசுரால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஸ்டம்பை பதம் பார்த்தார் டோணி.

பேட்டிங்கிலும் அப்படித்தான்

பேட்டிங்கிலும் அப்படித்தான்

டோணியின் இந்த ஒரு ஓட்டம் மட்டுமே வெற்றிக்கு காரணம் என்று நினைத்துவிடாதீர்கள். இந்தியா பேட் செய்தபோதும் இப்படித்தான் ஆட்டத்தின் கடைசி பந்தில் டோணி ஓடிய ஒரு மின்னல் வேக ரன்னும் சேர்ந்துதான் வெற்றிக்கு வழி வகுத்தது.

அஸ்வின் சொன்ன நோ..

அஸ்வின் சொன்ன நோ..

ஆம்.. இந்தியா பேட் செய்தபோது 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்திருந்தது. கடைசி பந்தை முஸ்தபிசுர் யார்க்கராக வீச, அதை லாங்-ஆன் திசையில் டோணி அடித்தார். பந்து நேராக ஃபீல்டர் கைக்கு சென்றது. இதனால் மறுமுனையில் நின்ற அஸ்வின் ஒரு ரன்போதும் என டோணியை பார்த்து கையை அசைத்தார்.

என்னா ஓட்டம்

என்னா ஓட்டம்

ஆனால் டோணியோ, கடைசி பந்தில் விக்கெட் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் 2வது ரன்னுக்கு ஓடினார். அஸ்வின் பாதி பிட்ச் அளவுக்கு கூட ஓடி வந்திருக்க மாட்டார், ஆனால் டோணியோ கிரீசை சென்று சேர்ந்துவிட்டார். இத்தனைக்கு பந்து டோணி ஓடும் திசையில்தான் (விக்கெட் கீப்பரை நோக்கி) ஃபீல்டரால் எறியப்பட்டது.

அந்த ஒரு ரன் அவசியம்

அந்த ஒரு ரன் அவசியம்

டோணிக்கு முஸ்தபிசுர், பந்து வீசும்போதே அஸ்வின் கிரீசை விட்டு ஓரளவுக்கு வெளியே ஓடி வந்திருந்தார். ஆனால் டோணியோ பந்தை அடித்த பிறகுதான் ஓடத்தொடங்கினார். அப்படியிருந்தும் அஸ்வினைவிட அதி வேகமாக ஓடி 2வது ரன்னையும் எட்டச் செய்தார் டோணி. இந்த 2வது ரன் மட்டும் கிடைத்திராவிட்டால் ஆட்டம் டிரா ஆகியிருக்க வாய்ப்பு இருந்தது.

கடைசி பந்துகள்

கடைசி பந்துகள்

இப்படி இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளின் பேட்டிங்கின்போதும், கடைசி பந்தில் டோணி ஓடிய மின்னல் ஓட்டம்தான் திரில் வெற்றியை இந்தியா சுவைக்க காரணமாக இருந்தது. இதை வைத்துதான், இந்தியாவின் உசைன் போல்ட் என்று டோணியை 'கையார' புகழ்கின்றனர் சமூகவலைத்தளவாசிகள்.

Story first published: Thursday, March 24, 2016, 11:51 [IST]
Other articles published on Mar 24, 2016
English summary
Not sure whether you noticed that One extra run which Dhoni took even when Ashwin said No! won it for India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X