For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராட்மேன் சாதனை தகர்ப்பு.. உலக சாதனை படைப்பு.. பாக். வீரர் யூனிஸ்கான் அபாரம்!

By Veera Kumar

கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் சீனியர் வீரர் யூனிஸ் கான், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்ததோடு, புதிய உலக சாதனையையும் படைத்தார்.

பாகிஸ்தான் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

பரபரப்பு கட்டம்

பரபரப்பு கட்டம்

இலங்கை இரு இன்னிங்சுகள் ஆடிவிட்ட நிலையில், பாகிஸ்தான் வெற்றிக்கு 377 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்களிலேயே 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், தொடக்க வீரர் ஷான் மசூத் மற்றும் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை மீட்டெடுத்தனர்.

சதம் விளாசிய யூனிஸ்கான்

சதம் விளாசிய யூனிஸ்கான்

நேற்றைய ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்களை எடுத்திருந்தது. ஷான் மசூத் 114 ரன்களுடனும், யூனிஸ்கான் சதத்தை கடந்தும் களத்தில் நின்றனர். இன்றும், ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இந்த ஜோடி ஆடி வருகிறது. யூனிஸ்கான் விளாசிய இந்த சதம் புதிய சாதனையை அவரின் பெயருக்கு பின்னால் எழுதியுள்ளது.

பிராட்மேன் சாதனை

பிராட்மேன் சாதனை

டான் பிராட்மேன், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் குவித்திருந்த நிலையில், யூனிஸ்கான், 30 சதங்களை விளாசி, பிராட்மேன் சாதனையை முந்தியுள்ளார். இந்த பட்டியலில் 51 சதங்களுடன், இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 30 சதங்கள் அடித்த வீரர்களான ஆஸி.யின் மேத்யூ ஹேடன் மற்றும் வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் ஆகியோருடன் யூனிஸ்கான், 8வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு முதல்

பாகிஸ்தானுக்கு முதல்

பாகிஸ்தானை பொறுத்தளவில் யூனிஸ்கான் 30 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் ஆகும். இவருக்கு அடுத்ததாக இன்சமாம் உல்-ஹக் 25 சதங்கள், முகமது யூசுப் 24 சதங்கள், ஜாவித் மியாண்டட் 23 சதங்கள், சலீம் மாலிக் 15 சதங்கள் விளாசியுள்ளனர்.

டாப் டக்கர்கள்

டாப் டக்கர்கள்

சர்வதேச அளவில் 51 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும், 45 சதங்களுடன், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் கல்லீஸ் 2வது இடத்திலும், 41 சதங்களுடன் ஆஸ்திரேலியாவின் பாண்டிங், 38 சதங்களுடன் இலங்கையின் குமார் சங்ககாரா, 34 சதங்களுடன் ராகுல் டிராவிட் ஆகிய வீரர்கள் முறையே, 3 முதல் 5வது இடங்கள் வரை பிடித்துள்ளனர்.

உலக சாதனை

உலக சாதனை

யூனிஸ்கான் தற்போது விளாசிய சதம், புதிய உலக சாதனையொன்றையும் படைத்துள்ளது. எப்போதுமே டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ்சில் ஆடும் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறுவது வழக்கம். பிட்ச் மிக மோசமாக இருக்கும் என்பதால் பந்துகள் தாறுமாறாக வரும். சரியான வேகத்தில் பேட்டுக்கு பந்துகள் வராது. அப்படிப்பட்ட 4வது இன்னிங்சில் மட்டும் யூனிஸ்கான் இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். இது புதிய சாதனை.

சச்சினே மூனுதான்

சச்சினே மூனுதான்

முன்னதாக, சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டி், வெஸ்ட் இண்டீசின் ராம்நரேஷ் சர்வான், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் தலா 4 செஞ்சுரிகளை, 4வது இன்னிங்சில் அடித்திருந்தனர். சச்சின் கூட 3 செஞ்சுரிகள்தான் அடித்திருந்தார். ஜெப்ரி பாய்காட், டான் பிராட்மேன், கிரகாம் கூச், கோர்டன் கிரீனிட்ஜ், ஜெயவர்த்தனே, ஹோபர்ட் சட்லிபி ஆகியோரும் 3 செஞ்சுரிகள் அடித்தோர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 7, 2015, 11:12 [IST]
Other articles published on Jul 7, 2015
English summary
Younis Khan has set a new world record Younis Khan has set a new world record With this century, Younis overtook Bradman in the highest number of hundred makers' list in Tests. This was Younis' 30th three-figure mark in the longest version of the game. He is now level at 8th place with Matthew Hayden and Shivnarine Chanderpaul. Bradman scored 29 tons. Also, Younis set a world record yesterday, as he became the first batsman in Test history to score 5 hundreds in the 4th innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X