For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் வாழ்க்கையை மாற்றி வரும் ஜிவாவின் சிரிப்பு: டோணி நெகிழ்ச்சி

By Siva

பெங்களூர்: தான் சென்னை அணிக்கு விளைாடுகிறேனா அல்லது இந்தியாவுக்காக விளையாடுகிறேனா என்பது பற்றி தனது மகள் ஜிவாவுக்கு கவலை இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

கேப்டன் டோணி ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவரது மனைவி சாக்ஷி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் நாட்டுக்காக விளையாடுவது தான் முக்கியம் என்று கூறி டோணி மகளை பார்க்க வரவில்லை. உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறிய பிறகே நாடு திரும்பி அவர் தனது மகள் ஜிவாவை பார்த்தார்.

இந்நிலையில் மகள் பற்றி டோணி கூறுகையில்,

மகள்

மகள்

என் மகள் பிறந்தபோது நான் இந்தியாவில் இல்லை. அவர் பிறந்த உடனே அவரை பார்க்க முடியவில்லை. அதை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருந்தது.

சிரிப்பு

சிரிப்பு

ஒரு குழந்தை நம் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருகிறது. என் மகளின் சிரிப்பு என் வாழ்க்கையை மாற்றி வருகிறது. இது போன்று தான் அனைவர் வாழ்விலும் நடக்கிறது.

அழுகை

அழுகை

நான் நாட்டுக்காக விளையாடுகிறேனா அல்லது சென்னை அணிக்காக விளையாடுகிறேனா என்பது பற்றி எல்லாம் ஜிவாவுக்கு கவலை இல்லை. அவளுக்கு அழ வேண்டும். அவ்வளவு தான்.

வீரர்கள்

வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களும், சீனியர் வீரர்களும் வேறுபாடு இன்றி பழகுவது தான் அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம். இளம் வீரர்களை சேர்க்க அணியில் இருந்து சீனியர்களை வெளியேற்ற முடியாது. இருப்பினும் அணியில் ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் உள்ளனர்.

மோஹித் சர்மா

மோஹித் சர்மா

இந்திய அணியில் விளையாடும் ஈஷ்வர் பாண்டே, மோஹித் சர்மா ஆகியோர் சென்னை அணியில் உள்ளனர். சென்னை அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். அதே சமயம் பிரன்டன் மெக்கல்லம் போன்ற சீனியர்களை வெளியே சும்மா உட்கார வைக்க முடியாது.

மைக் ஹஸ்ஸி

மைக் ஹஸ்ஸி

சீனியர்களான சுரேஷ் ரெய்னா, மைக் ஹஸ்ஸி ஆகியோரிடம் இருந்து இளம் வீரர்கள் பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள். இளம் வீரர்களை வழிநடத்தும் ஹஸ்ஸி போன்றோர் இருப்பது அணிக்கு பலம் ஆகும் என்று டோணி தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 22, 2015, 14:45 [IST]
Other articles published on Apr 22, 2015
English summary
Chennai Super Kings skipper Mahendra Singh Dhoni said that his daughter Ziva doesn't care whether he plays for the country or play for a good franchise like Chennai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X