For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்களுக்குள் 'கம்யூனிகேஷன் கேப்' இருந்ததால்தான் தோற்றோம்: டோணி பரபர குற்றச்சாட்டு

By Veera Kumar

பிரிஸ்பேன்: இந்திய வீரர்களுக்குள் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததுதான் ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்டில் அணி தோற்றதற்கு காரணம் என்று கேப்டன் டோணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சிக்காக அளிக்கப்பட்ட ஆடுகளம் மிக மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில், நேற்று ஆட்ட நேரம் முடியும்போது, 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது இந்திய அணி. ஆனால் இன்று காலை அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்து 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதன்பிறகு ஷிகர் தவான் அடித்த 81 ரன்கள் உதவியுடன் ஓரளவுக்கு மீண்டது. ஆஸ்திரேலிய அணியைவிட 127 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.

Dhoni blames 'lack of communication' in the dressing room

ஆனால் இந்த ரன்களை எட்டிப்பிடிப்பதற்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. இருப்பினும் போராடி அந்த அணி இரண்டாவது டெஸ்டை வென்றது. இந்தியா கூடுதலாக 70 அல்லது 80 ரன்கள் எடுத்திருந்தாலும் ஆஸ்திரேலிய அணியால் 2வது இன்னிங்கிசில் அதை துரத்தி பிரித்திருக்க முடியாது என்றே கிரிக்கெட் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்திய பேட்டிங் ஏன் காலையில் அப்படி தடுமாறியது என்பதற்கு டோணி சொன்ன காரணம் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

போட்டிக்கு பிறகு டோணி கூறியது இதுதான்: பேட்டிங் பயிற்சிக்காக எங்களுக்கு மோசமான பிட்ச் ஒதுக்கப்பட்டது. அதில் பயிற்சி பெற்றபோது பந்துகள் தாறுமாறாக எகிறி வந்தன. சில நேரங்களில் தாழ்வாகவும் சென்றன. பந்துகளை கணிக்க முடியாதபடி பிட்ச் இருந்தது. இதனால் பயிற்சியின்போது, ஷிகர் தவான் கைகளில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. ஆனால் காயம் குறித்து உடனடியாக பிற வீரர்களிடம் ஷிகர் கூறவில்லை.

பேட்டிங் செய்ய இந்தியா களமிறங்க வேண்டிய நேரம் நெருங்கும்போதுதான், தன்னால் பேட்டிங் செய்ய களமிறங்க முடியாது என்று ஷிகர் தெரிவித்தார். எனவே விராட் கோஹ்லியை பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டியதாயிற்று. விராட்டும், புஜாராவும் களமிறங்கினர். ஷிகர் தவான் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால், விராட்டுக்கு பயிற்சி பெற கூட நேரம் கிடைக்காமல் போனது. காலையில் ஏற்பட்ட இந்த குழப்பத்தால்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையை கட்ட வேண்டியதாயிற்று. தகவல் தொடர்பில் இருந்த குறைபாடே இதற்கு காரணம். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், வேறு வழியில்லாமல் வலியோடு ஷிகர் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கி அப்போதுதான் 45 நிமிடங்கள் ஆகியிருந்தன. 45 நிமிடங்கள் கழித்து களமிறங்கிய ஷிகர் தவான், முதலிலேயே வழக்கம்போல களமிறங்கியிருக்கலாமே என்ற கேள்வி வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Saturday, December 20, 2014, 16:58 [IST]
Other articles published on Dec 20, 2014
English summary
India succumbed to second consecutive Test defeat in Australia on Saturday as the hosts won by four wickets inside four days, but the manner in which India lost and skipper MS Dhoni's admission after that should discomfort a lot of fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X