For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்கால் காயம்... இந்த ஆண்டு சீசனை விட்டே விலகினார் ரோஜர் பெடரர்!

ரியோ டி ஜெனீரோ: டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான பெடரரின் அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. ஒலிம்பிக் மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் இதர டென்னிஸ் தொடர்களிலும் தான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் பெடரர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தனது நிலையை விளக்கியுள்ளார். தான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெருத்த ஏமாற்றம்

பெருத்த ஏமாற்றம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்து சார்பில் என்னால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதற்காக நான் ஏமாற்றமடைகிறேன். மேலும் இந்த சீசன் முழுவதும் என்னால் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

காயம் காரணமாக

காயம் காரணமாக

எனக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக என்னால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை உள்ளது. எனது டாக்டர்கள், எனது குழுவுடன் நடத்திய விவாதத்திற்குப் பின்னரே, வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளது.

கடினமான முடிவு

கடினமான முடிவு

இந்த சீசன் முழுவதும் நான் விலகிக் கொள்வது என்பது மிகக் கடினமான முடிவு. இந்த ஆண்டு தொடக்கத்தில் எனக்கு நடந்த முழங்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் நான் சரியாக நிறைய அவகாசம் தேவைப்படுகிறது.

டாக்டர்கள் கண்டிப்பு

டாக்டர்கள் கண்டிப்பு

மேலும் சில ஆண்டுகளுக்கு நான் தொடர்ந்து டென்னிஸ் ஆட வேண்டும் என்றால் எனது இரு முழங்கால்களுக்கும் முழுமையாக குணமடைய வாய்ப்பு தர வேண்டும் என்று டாக்டர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.

கஷ்டம்தான்

கஷ்டம்தான்

இந்த ஆண்டு முழுவதும் விளையாடாமல் இருப்பது கடினமானது. இருப்பினும் இதுவரை நான் மிகப் பெரிய அளவில் காயமடையாமல் சிறிய காயங்களை மட்டுமே சந்தித்து இத்தனை காலம் விளையாட முடிந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

மீண்டும் வருவேன்

மீண்டும் வருவேன்

புத்துணர்ச்சியுடன், மேலும் வலிமையுடன் அடுத்த ஆண்டில் நான் மீண்டும் டென்னிஸ் ஆட வருவேன். இப்போது போலவே அப்போதும் ஆக்ரோஷமான பெடரரை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் பெடரர். பெடரருக்கு அடுத்த மாதம் 35 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரியில் ஆபரேஷன்

பிப்ரவரியில் ஆபரேஷன்

பெடரருக்கு கடந்த பிப்ரவரி மாதம் முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடந்தது. காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிப் போட்டியிலிருந்து விலகினார். பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்தும் கடந்த மே மாதம் அவர் விலகினார். விம்பிள்டனில் அவர் அரை இறுதி வரை வந்து தோல்வியுற்றார். அவரது முழங்கால் பிரச்சினைதான் இத்தனைக்கும் காரணமாகும். தற்போது இந்த ஆண்டு சீசனை விட்டே விலகியுள்ளார்.

Story first published: Wednesday, July 27, 2016, 9:29 [IST]
Other articles published on Jul 27, 2016
English summary
Tennis ace Roger Federer has pulled out of the remaining Tennis season this year including Rio 2016, due to knee injury.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X