For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

6வது வெஸ்டர்ன் - சதர்ன் ஓபன் பட்டம்.. பெடரருக்கு!

மாசான், ஓஹையோ: அமெரிக்காவின் மாசான் நகரில் நடந்த வெஸ்டர்ன்- சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளார் ரோஜர் பெடரர். இது இவருக்கு இங்கு 6வது பட்டமாகும்.

மேலும் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் இது 80வது பட்டமாகும். இறுதிப் போட்டியில் டேவிட் பெர்ரரை 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பெடரர்.

Federer claims sixth W&S Open title

அடுத்த வாரம் நியூயார்க்கில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்பாக இது பெடரருக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. அமெரிக்க ஓபன் பட்டத்தை பெடரர் வென்றால் அது அவருக்கு 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

ஏற்கனவே அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை பீட் சாம்ப்ராஸ் வசம் பறித்துவிட்டார் பெடரர். தற்போது சாம்ப்ராஸை விட 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அதிகம் வைத்துள்ளார் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 18, 2014, 15:04 [IST]
Other articles published on Aug 18, 2014
English summary
Oh, he also notched his sixth Western & Southern Open title and 80th career tournament win with a 6-3, 1-6, 6-2 victory over David Ferrer at the Lindner Family Tennis Center on Sunday. Eyeing his 18th Grand Slam title when the U.S. Open starts next week in New York, Federer thought about passing up the Cincinnati tournament and went into it without too many expectations.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X