For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சச்சின் கையால் பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பி தர தீபா கர்மாக்கர் முடிவு!

By Veera Kumar

டெல்லி: ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாக்கருக்கு பரிசாக கிடைத்த பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளாராம்.

ரியோ ஒலிம்பிக் தொடரின், ஜிம்னாஸ்டிக் போட்டித்தொடரில் 4வது இடம் பிடித்தவர் தீபா கர்மாக்கர்.

Gymnast Dipa Karmakar to return her gift BMW car

பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மல்யுத்த வெண்கல பதக்க வீராங்கனை சாக்ஷி மாலிக் போலவே தீபா கர்மாக்கருக்கும், இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் சாமுண்டேஷ்வரநாத், இவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார்.

இதை சச்சின் டெண்டுல்கர் தனது கரங்களால் பரிசளித்தார். இந்நிலையில், பிஎம்டபிள்யூ காரை திருப்பி வழங்க தீபா கர்மாக்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான உரிய காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது பெற்றோரோ, சொந்த ஊரான அகர்த்தலா (திரிபுரா) போன்ற சிறிய நகரில் பிஎம்டபிள்யூ கார் என்பது சரிவராது. மேலும், அதை பராமரிப்பதும் கஷ்டம் என கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.

Story first published: Monday, October 10, 2016, 14:24 [IST]
Other articles published on Oct 10, 2016
English summary
Dipa Karmakar, the first ever female gymnast from India to have participated in an Olympics and earned 4th place, has decided to give her latest gift back to the owner.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X