For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒழுங்கீனம்... ஹாக்கி போட்டிகளில் மூத்த வீரர் குர்பஜ் சிங் விளையாட 9 மாதம் தடை!!

By Mathi

டெல்லி: இந்திய மூத்த ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் 9 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்பிந்தர் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பெல்ஜியத்தில் கடந்த மாதம் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின்போது குர்பஜ்சிங், அணி வீரர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது குறித்து

Hockey: 'Indisciplined' Gurbaj Singh suspended for 9 months

இதனைத் தொடர்ந்து குர்பஜ் சிங் 9 மாதங்களுக்கு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் அவர் அடுத்த ஆண்டு மே 9-ஆம் தேதி வரை இந்திய அணி விளையாடும் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இந்தக் கூட்டத்தில் குர்பஜ்சிங்கும் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு குர்பஜ் சிங்குக்கு உள்ளது.

Story first published: Tuesday, August 11, 2015, 11:20 [IST]
Other articles published on Aug 11, 2015
English summary
Senior India hockey player Gurbaj Singh was suspended for 9 months for indulging in groupism and creating disharmony within the team, a decision which might shatter the experienced midfielder's dream of playing in next year's Rio Olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X