For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் தரவில்லை.. நான் செத்தே போயிருப்பேன்.. ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைக்கு நேர்ந்த 'கொடூரம்'!

By Veera Kumar

திருவனந்தபுரம்: ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மாரத்தான் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஜெய்ஷாவிற்கு இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் தண்ணீர் கூட அளிக்காததால் அவர் உயிருக்கு போராடி மீண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்தது. இதில், மொத்தம் 42 கிலோ மீட்டர் தொலை தூரம் கொண்ட மகளிர் மாரத்தான் ஒட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில், ஜெய்ஷா பங்கேற்றார்.

கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தண்ணீர், குளுகோஸ், பிஸ்கட் மற்றும் புத்துணர்வு அளிக்கக் கூடிய பொருட்களை அளிக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் கடமையாகும்.

தண்ணீர் பந்தல்

தண்ணீர் பந்தல்

வீரர்கள் மாரத்தான் பந்தயத்தில் ஓடும் போது இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் போன்ற புத்துணர்வு அளிக்கும் பொருட்கள் வைப்பதற்கென்று ரியோ ஒலிம்பிக் கமிட்டி இடம் ஒதுக்கியிருந்தது.

பிற நாடுகள் பலே

பிற நாடுகள் பலே

ஆனால் வீரர்களுக்கு அந்தந்த நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டிதான் இந்த பொருட்களையெல்லாம் வழங்க வேண்டும். அதை தான் ஒலிம்பிக்கில் பங்கேற்ற எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு தேவையான புத்துணர்ச்சி பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தன.

இந்தியா செய்யவில்லை

இந்தியா செய்யவில்லை

ஆனால் ஜெய்ஷா மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போது வீரர்களுக்கு புத்துணர்வு பொருட்களான தண்ணீர், பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் போன்ற பொருட்கள் வழங்க வேண்டிய இந்திய ஒலிம்பிக் சங்கம் அதை செய்யவிலை.

கொடிதான் இருந்தது

கொடிதான் இருந்தது

மாரத்தான் பந்தயத்தில் ஜெய்ஷா ஓடும் போது இந்தியாவிற்கு என்று ஒதுக்கப்பட்ட புத்துணர்வு பொருட்கள் வைக்கும் இடத்தில் இந்தியாவின் தேசிய கொடியும் இந்தியாவின் பெயரும் மட்டுமே இருந்துள்ளது. ஜெய்ஷா தண்ணீர் தேவை என ஏங்கியுள்ளார். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை.

விதிமுறை வேறு

விதிமுறை வேறு

அதேநேரம், 2 கி.மீ தூரத்திற்கு ஒரு பிற நாடுகளின் ஸ்டால்கள் இருந்தன. அங்கு தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இருந்தன. ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிப்படி ஒரு வீராங்கானை வேற்று நாட்டினரிடமிருந்து எந்த உணவு பொருட்களோ அல்லது புத்துணர்வு பொருட்களோ வாங்க கூடாது அதை மீறினால் அந்த வீரரோ அல்லது வீராங்கனையோ அந்த போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழப்பார்.

8 கி.மீ ஒருமுறை

8 கி.மீ ஒருமுறை

அதனால், மிகவும் களைப்படைந்தபோதும் கூட, ஜெய்ஷா பிற நாட்டு தண்ணீரை வாங்கி குடிக்கவில்லை. எட்டு கிலோ மீட்டருக்கு ஓரிடத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சார்பில் வீரர்களுக்கு புத்துணர்ச்சி பானம் வைக்கப்பட்டிருக்கும். அதில்தான் ஜெய்ஷாவுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால் 8 கி.மீ ஒருமுறை நீரை பருகிக்கொண்டு ஓடுவது கஷ்டமான காரியம்.

மயக்கம்

மயக்கம்

இதனால் ஜெய்ஷாவால் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவிலை மேலும் போட்டியின் எல்லையை எட்டும்போது அவர் மயங்கி விழுந்துவிட்டார். மயங்கி விழுந்த அவரை காப்பாற்ற கூட இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை என்பது பெரும் சோகம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

89வது இடம்

89வது இடம்

இந்த மாரத்தானில் 157 வீராங்கனை கலந்து கொண்டனர். தண்ணீர் கூட கிடைக்காத ஜெய்ஷா அப்படியும் ஓடி 89வது இடம்பிடித்தார். இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகளின் அக்கறையின்மையை தற்போது மீடியாக்களிடம் வெளிப்படுத்தி உள்ளார். நான் செத்துப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தேன். எனது உடலில் பல்ஸ் குறைந்ததை உணர்ந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் சிகிச்சை

கேரளாவில் சிகிச்சை

ஜெய்ஷா பெங்களூரு திரும்பியதும் அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசீலனை செய்து உள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை காணப்பட்டது, இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புல்ன்ஸ் வசதி செய்யப்பட்டது. ஆனால் ஜெய்ஷா தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவில் சிகிச்சை பெற்று கொள்ள விரும்பி உள்ளார்.

விரும்பவில்லை

விரும்பவில்லை

மேலும் மாரத்தான் போட்டிகளில் அவர் கலந்து கொள்ள நான் விரும்பியது கிடையாது என்பதையும் பேட்டியில் ஜெய்ஷா கூறி உள்ளார். நான் 1500 மீட்டர் அளவில் நடுத்தர தொலைவில் ஓடும் வீராங்கனை. நான் 1500 மீட்டர் விளையாட்டுகளை மட்டுமே விரும்பினேன். என்னுடைய பயிற்சியாளர் என்னை நீண்ட தொலைவிலான மாரத்தான் போட்டியில் ஓட கட்டாயப்படுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டிஉள்ளார். இந்திய அதிகாரிகளின் அலட்சியம் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.

Story first published: Tuesday, August 23, 2016, 8:08 [IST]
Other articles published on Aug 23, 2016
English summary
“I could have died there”, said a distraught O P Jaisha as she recalled the women’s marathon event at Rio Olympics during which she claimed she was not provided any water and energy drinks by the officials despite designated stations were given for India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X