For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓட்டைப் பந்து வீச்சை வைத்துக் கொண்டு "ஆஸி. நியூஸி"யில் ஊசி கூட வாங்க முடியாது!

டெல்லி: இந்தியா உலகக் கோப்பையைத் தக்க வைக்க 3 நல்ல நாட்கள் மட்டும் அமைந்தால் போதும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு வெற்றித் தேடித் தரும் வகையிலான பல வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், இந்தியா உலகக் கோப்பையைத் தக்க வைக்கக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிராவிடின் பேட்டியிலிருந்து:

நல்ல வாய்பபு இருக்கு

நல்ல வாய்பபு இருக்கு

என்னைப் பொறுத்தவரை இந்தியா உலகக் கோப்பையைத் தக்க வைக்க நல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். காரணம், நமது அணியில் மேட்ச் வின்னர்கள் நிறையவே உள்ளனர்.

காலிறுதி ஈஸிதான்

காலிறுதி ஈஸிதான்

இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு காலிறுதிப் போட்டிக்கு முன்னேறுவது சுலபமானதுதான். அதில் கஷ்டம் இருக்கப் போவதில்லை. அதன் பின்னர் கடைசி எட்டு அணிகளின் பட்டியலுக்கு முன்னேற வேண்டும்.

3 போட்டிதான் முக்கியம்

3 போட்டிதான் முக்கியம்

அங்கு 3 நாக் அவுட் போட்டிகள்தான் உள்ளன. அதில் நாம் வெல்ல வேண்டும். அதில் வெல்வதற்குத் தேவையான வீரர்கள் நம்மிடம் நிறையவே உள்ளனர்.

டோணி இருக்காரு.. கோஹ்லி இருக்காரு

டோணி இருக்காரு.. கோஹ்லி இருக்காரு

நமது அணியில் கேப்டன் டோணி, விராத் கோஹ்லி போன்ற சிறப்பான வீரர்கள் நிறையவே் உள்ளனர். தனி ஆளாக இவர்களால் போட்டியை வெல்ல முடியும். இப்படிப்பட்ட தனித் திறமைதான் உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றி தேடித் தரும்.

3 நாள் போதும்

3 நாள் போதும்

அந்த 3 நாக் அவுட் போட்டிகளை வெல்வதுதான் முக்கியமானது. அந்த மூன்று நாளும் நல்ல நாட்களாக அமைந்து விட்டால் நமக்கு கோப்பை உறுதியாகி விடும். கூடவே அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும்.

பேட்டிங்தான் முக்கிய பலம்

பேட்டிங்தான் முக்கிய பலம்

இந்திய அணியைப் பொறுத்தவரை எப்போதுமே நமக்கு பேட்டிங்தான் முக்கிய பலமாக இருந்து வருகிறது. பேட்டிங்குக்கு பக்க பலமாக பந்து வீச்சாளர்கள் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இருந்தாலும் பேட்டிங்கை மட்டும் நம்பியிருக்கவும் முடியாது. அது கடினமானது.

டோணி, கோஹ்லி விளையாடினால்

டோணி, கோஹ்லி விளையாடினால்

கோஹ்லியும், கேப்டன் டோணியும் சிறப்பாக விளையாடினால் ஆட்டத்தின் போக்கே மாறி விடும். எதுவும் சாத்தியமாகும். எல்லாமே கை கூடி வரும். அதேசமயம், பந்து வீச்சாளர்களும் விரைவிலேயே நல்ல பார்முக்கு வருவது அவசியமானது, முக்கியமானது.

நான் கணிக்கும் நால்வர்

நான் கணிக்கும் நால்வர்

தற்போதைய அணிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா ஆகிய நான்கு அணிகளுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

இலங்கையும் இருக்கே

இலங்கையும் இருக்கே

அதேசமயம் இலங்கையையும் விட்டு விட முடியாது. அவர்கள் எப்போதுமே சர்ப்ரைஸ் அளிப்பதில் சிறந்தவர்கள். இவர்களில் ஒருவரே இந்த முறை கோப்பையைப் பெறுவார்கள் என்றும் நம்புகிறேன் என்றார் டிராவிட்.

ஊசி கூட வாங்க முடியாது!

ஊசி கூட வாங்க முடியாது!

இப்படியே நாம "அனாலிசிஸ்" மட்டுமே செய்து கொண்டிருந்தால் பங்களாதேஷ் கோப்பையை தட்டிச் செல்லும் வாய்ப்பையும் மறுக்க முடியாது.. காரணம் ஓட்டை உடைசல் பந்து வீச்சை வைத்துக் கொண்டு "ஆஸி. நியூஸி".யில் ஊசி கூட வாங்க முடியாது!

Story first published: Wednesday, January 21, 2015, 13:27 [IST]
Other articles published on Jan 21, 2015
English summary
Batting legend Rahul Dravid has said the presence of multiple match-winners in India's ICC World Cup squad gives the title-holders a strong chance of retaining the mega trophy in Australia and New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X