For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரியோ ஒலிம்பிக்... இந்தியாவின் பெருமையை நமது வீரர்கள் உலகறிய செய்வார்கள்... மோடி நம்பிக்கை

டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்ல வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய ஒலிம்பிக் குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 21-ம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. 17 நாட்கள் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக டெல்லியில் மராத்தான் ஓட்டம் தொடங்கியது. டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் மாரத்தான் ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியா சார்பில் ரியோ ஒலிம்க்கில் பங்கேற்கும் 119 விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

அதிக வீரர்கள்...

அதிக வீரர்கள்...

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 100 வருடங்களுக்கும் மேலாக பங்கேற்று வந்தபோதிலும் இந்த முறை தான் அதிக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுப்படுகின்றனர். இந்த முறை இந்தியாவில் இருந்து அதிக வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்பதால், நிச்சயமாக அவர்களுடைய சிறந்த செயல்பாட்டை கொடுப்பார்கள்.

சிறப்புக் கவனம்...

சிறப்புக் கவனம்...

விளையாட்டு வீரர்கள் சிறப்பாக தங்களை தயார் படுத்தியுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியில் அரசு முழுக் கவனம் செலுத்தியது. மேலும், வீரர்கள் தங்களது பயிற்சியாளர்களை தாங்களே தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அரசு ஒரு வீரருக்காக சுமார் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடி வரை செலவு செய்துள்ளது.

மாவட்டத்திற்கு ஒரு வீரர்...

மாவட்டத்திற்கு ஒரு வீரர்...

2020-ம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 200-க்கும் அதிகமான வீரர்கள் இந்தியாவில் இருந்து அனுப்படுவார்கள். 2020 ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு வீரர் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பெருமையை நமது வீரர்கள் உலகறியசெய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Story first published: Sunday, July 31, 2016, 11:42 [IST]
Other articles published on Jul 31, 2016
English summary
Assuring "all possible help" to the Indian contingent at the Rio Olympic Games 2016, scheduled to begin on August 5, Prime Minister Narendra Modi on Sunday (July 31) hoped that Indian sportspersons will be able to win hearts of people from across the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X