For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கை முடித்து விட்டு வருகிறேன், காத்திருக்கட்டும் கல்யாணம்.. ஹாக்கி வீராங்கனையின் அதிரடி

சண்டிகர்: ஒலிம்பிக் போட்டிதான் முக்கியம். அதை முடித்து விட்டு வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த வீராங்கனை தீபிகா தாக்கூர் தனது பெற்றோரிடம் கூறி திருமணத்தையே நிறுத்தி வைத்துள்ளார்.

இவர் மட்டுமல்ல, மல்யுத்த வீராங்கனை லலிதா ஷெராவத், கீதா பொகத் ஆகியோரும் கூட திருமணத் திட்டங்களைத் தள்ளி வைத்துள்ளனர். இதனால் ஹரியானாவில் இவர்கள் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது.

2016ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தங்களது திருமணத்தை நடத்த இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

28 வயது தீபிகா

28 வயது தீபிகா

28 வயதாகும் தீபிகா, இந்திய மகளிர் ஹாக்கி அணியில் முக்கிய வீரங்கனை. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

அக்டோபர் வரை டைம் கொடுத்த அம்மா

அக்டோபர் வரை டைம் கொடுத்த அம்மா

தீபிகா கூறுகையில், எனது தாயார் அக்டோபர் மாதம் வரை டைம் கொடுத்திருக்கிறார். ஆனால் தற்போது ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்திருக்குமாறு அவரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

இறப்பதற்குள் மணக்க வேண்டும்

இறப்பதற்குள் மணக்க வேண்டும்

தீபிகாவின் தந்தை இறந்து விட்டார். தாயாருக்கும் உடல் நலம் சரியில்லை. தான் இறப்பதற்குள் மகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துப் பார்க்க அவர் ஆசைப்படுகிறாராம்.

ஒலிம்பிக் முக்கியமாச்சே

ஒலிம்பிக் முக்கியமாச்சே

இதுகுறித்து தீபிகா கூறுகையில், தாயாரின் உடல் நி்லை கவலையாக இருந்தாலும் கூட ஒலிம்பிக் எனது கனவு. அது நனவாகியிருக்கும்போது அதற்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். திருமணமாகி விட்டால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவேதான் காத்திருக்கக் கூறியுள்ளேன்.

அக்காக்களுக்கு சீக்கிரமே திருமணம்

அக்காக்களுக்கு சீக்கிரமே திருமணம்

இவரது அக்காக்கள் மூவருக்கும் 26 வயதுக்கு முன்பே திருமணமாகி விட்டதாம். தீபிகாவுக்குத்தான் லேட் ஆகி விட்டது என்று அவரது தாயார் புலம்பி வருகிறாராம்.

இவர்களும் அப்படித்தான்

இவர்களும் அப்படித்தான்

இதேபோல 22 வயதான மல்யுத்த வீராங்கனை லலிதா ஷெராவத், 26 வயதான கீதா பொகத் ஆகியோரும் கூட ஒலிம்பிக்குக்காக திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனராம்.

Story first published: Thursday, July 9, 2015, 11:46 [IST]
Other articles published on Jul 9, 2015
English summary
several women athletes have created a flutter in Haryana by putting off wedding plans so that they can focus on preparing for the 2016 Rio Olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X