For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை?

மாஸ்கோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை விதிக்க சர்வதகேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ரஷ்ய வீரர், வீராங்கனைகளின் ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்ய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதால் இந்த அதிரடி முடிவை எடுக்க சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ள 387 வீரர், வீராங்கனைகளுக்கும் ரியோ போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளது. ஊக்க மருந்து விவகாரத்தில் ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையையும் களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ரஷ்யாவைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் எடுக்கவுள்ளதாம்.

ஊக்க மருந்து சர்ச்சை

ஊக்க மருந்து சர்ச்சை

ஏற்கனவே லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு அடுத்தடுத்து பல ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் ரஷ்ய அரசுக்கே இதில் தொடர்பு இருப்பது அம்பலமாகி அனைவரையும் அதிர வைத்தது.

லண்டன் ஒலிம்பிக்ஸ்

லண்டன் ஒலிம்பிக்ஸ்

கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பல வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரஷ்ய விளஐயாட்டுத்துறை அமைச்சகமே ஊக்க மருந்துகளைக் கலந்த கொடுத்து அனுப்பியது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்துறை அதிபர் புடின் வசம்தான் உள்ளது என்பதால் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கும் தடை

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கும் தடை

ரியோ ஒலிம்பிக் மட்டுமல்லாமல் 2018ல் தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாம்.

அப்பாவிகளுக்காக ஒரு சான்ஸ்

அப்பாவிகளுக்காக ஒரு சான்ஸ்

அதேசமயம், தவறு செய்யாத, திறமையான ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஒலிம்பிக் சம்மேளனம் யோசித்து வருகிறதாம். இதுதொடர்பாக அனைத்து நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்களின் கருத்தை அது கேட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம்

தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம்

அப்படி அனுமதிப்பதாக இருந்தால் அந்த வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 24, 2016, 17:35 [IST]
Other articles published on Jul 24, 2016
English summary
IOC has decided to ban entire Russian contigent from Rio Olympics on the doping issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X