For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி, டிவில்லியர்ஸ் அதிரடி..144 ரன்களில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு சாதனை வெற்றி !

By Karthikeyan

பெங்களூரு: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். சீசன் 9-ன் 44-வது லீக் போட்டியில் நேற்று மாலை 4 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ரெய்னா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.

IPL 2016: AB de Villiers, Virat Kohli tons hand RCB record 144-run win

தொடக்க வீரர்களாக கெய்லும் கோஹ்லியும் களமிறங்கினார்கள். கெய்ல் இந்தப் போட்டியிலும் ஏமாற்றமளித்தார். 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார் கோஹ்லி.

வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ், 43 பந்துகளில் சதமடித்தார் (8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்). பிரவின் குமார் வீசிய 16-வது ஓவரை நாலாபுறமும் சிதறடித்து 23 ரன்கள் எடுத்தார் டிவில்லியர்ஸ். பிரவோ வீசிய 18-வது ஓவரில் கோஹ்லியும் டிவில்லியஸும் சேர்ந்து 30 ரன்கள் குவித்தார்கள். 19-வது ஓவரிலும் 30 ரன்களை எடுத்தது பெங்களூர் அணி. அந்த ஒரு ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார் கோஹ்லி.

இதன் பின்னர் கோஹ்லி 109 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் (12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்). கோஹ்லி, டிவில்லியர்ஸ் அதிரடியால் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது பெங்களூர்.

இமாலய இலக்கை விரட்டிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மித் 7 ரன்களிலும், மெக்கல்லம் 11 ரன்களிலும் வீழ்ந்தனர். 'பிஞ்ச் கிட்டராக' வந்த ஜடேஜா 21 ரன்களில் நடையை கட்டினார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். குஜராத் அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 38 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அந்த அணி 18.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பெங்களூர் அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் ஜோர்டான் 4 விக்கெட்டுகளையும், சஹால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 52 பந்துகளில் 129 ரன்கள் விளாசிய டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2008-இல் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே ஐபிஎல் போட்டியில் ஓர் அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பெங்களூரு முறியடுத்துள்ளது.

Story first published: Sunday, May 15, 2016, 3:27 [IST]
Other articles published on May 15, 2016
English summary
AB de Villiers and Virat Kohli today (May 14) orchestrated a mayhem by scoring magnificent centuries as Royal Challengers Bangalore (RCB) inflicted a crushing 144-run defeat on league leaders Gujarat Lions (GL), recording the biggest ever victory in the history of Indian Premier League (IPL) here. (Match Scorecard)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X