For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தியது புனே

By Karthikeyan

ஹைதராபாத்: ஐ.பி.எல் தொடர் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டோணி தலைமையிலான புனே அணி தனது தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

IPL 2016: Pune end 4-match losing streak in rain-hit contest

தொடர்ந்து தனது அதிரடியால் மிரட்டி வந்த வார்னர் டக் அவுட் ஆகி வெளியேறினார். வார்னரை தொடர்ந்து டாரே 8 ரன்களிலும், மோர்கன் ரன் எதுமின்றியும், ஹூடா மற்றும் ஹென்றிஹூஸ் தலா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

திண்டாவின் அபார பந்துவீச்சில் ஹைதராபாத் ரன்குவிக்க முடியாமல் திணறியது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8.1 ஓவர்களில் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தவான் மட்டும் நிதானமாக நின்று ஆடினார். சிறிது நேரம் நிலைத்து நின்ற ஓஜா 18 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. தவான் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 53 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன்குவிக்க முடியாமல் அவுட் ஆகினர்.

இதனையடுத்து புனேவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் டு பிளிசிஸ் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் குவித்தது. டு பிளசிஸ் 21 பந்தில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் தோனியும் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

11 ஓவரில் புனே 94 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. வெற்றிக்கு இன்னும் 56 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புனே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலமாக தனது தொடர் தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது புனே.

Story first published: Wednesday, April 27, 2016, 2:05 [IST]
Other articles published on Apr 27, 2016
English summary
Rising Pune Supergiants (RPS) snapped their 4-match losing streak with a 34-run victory, via the Duckworth/Lewis method, in a rain-hit match against Sunrisers Hyderabad (SRH) in the Indian Premier League 2016 (IPL 9) here tonight (April 26).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X