For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தசைப்பிடிப்பால் தடுமாறிய அதிவேக மனிதன்... தடகள மன்னன் உசேன் போல்ட் ஓய்வு

நொடிகளில் நூறு மீட்டர் தூரத்தைக் கடக்கும் அதிவேக மனிதன் உசைன்போல்ட் தசைப்பிடிப்பில் அவதிப்பட்ட நிலையில் போட்டியை நிறைவு செய்யாமலேயே, தடகள போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

By Devarajan

லண்டன்: உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தசைப்பிடிப்பு காரணமாக தனது கடைசிப் போட்டியை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

லண்டனில் 16 வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் ஜமைக்கா ஜாம்பவான் உசேன் போல்ட், தனது கடைசி பந்தயமான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தங்கள் அணிக்காக 3-வது வீரராக ஓடி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

 Jamaica’s Usain Bolt’s Final Race Ends in a Cry of Pain

இறுதிபோட்டியில் என்றாலும் வேகம் குறையக்கூடாது என்று ஓடிய உசைன் போல்ட், இடது காலில் திடீரென தடைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மைதானத்தில் போல்ட் தடுமாறி விழுந்தார். இதனால் ஜமைக்கா அணியால் போட்டியை நிறைவு செய்ய‌முடியவில்லை.‌

இப் போட்டியில் பிரிட்டன் அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது‌. அமெரிக்கா இரண்டாவது இடமும், ஜப்பான் மூன்றாவது இடமும் பிடித்துள்ளன. வெற்றிபெறாமல் போல்ட் அளித்த அதிர்ச்சியிலிருந்து ஜமைக்கா ரசிகர்கள் மீள இன்னும் கொஞ்சம் காலங்கள் ஆகும்.

Story first published: Sunday, August 13, 2017, 14:10 [IST]
Other articles published on Aug 13, 2017
English summary
Usain Bolt’s Final Race Ends in a Cry of Pain. London men’s 400 meters relay finals at the world track championships.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X