For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு பந்து.. வந்துச்சா.. அடிச்சேனா.. 7 ரன்.. ரெக்கார்டு பாஸ்!

கேப்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட்.. ஜஸ்ட் ஒரே ஒரு பந்தில் உலக சாதனை படைத்து விட்டார்.

கிரிக்கெட் வரலாற்றில், ஒரே பந்தில் 7 ரன்கள் எடுத்து இந்த சாதனையைப் படைத்துள்ளார் பிராத்வெய்ட்.

தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. அதில்தான் இந்த சுவாரஸ்யமான, எதிர்பாராத சாதனை அரங்கேறியது.

Kraigg Brathwaite Sets Test Record With Seven Runs From One Ball

தனக்கு வந்த ஒரு பந்தை வேகமாக அடித்து விரட்டிய பிராத்வெய்ட், உடனடியாக ரன் எடுக்க ஓடினார். ஓடியே 3 ரன்களை எடுத்து விட்டார். அப்போது பந்தை வசப்படுத்திய தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை பவுலர் முனையில் உள்ள ஸ்டம்ப்பை நோக்கி வீசினார். சற்று வேகமாக வீசியதால் பந்து ஸ்டம்பில் படாமல் வேகமாக பவுண்டரி லைனை நோக்கி ஓடிக் கடந்து விட்டது. இதனால் பிராத்வெய்ட்டுக்கு 7 ரன்கள் கிடைத்து விட்டன.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் புள்ளிவிவர நிபுணர் ஆண்ட்ரூ சாம்சன் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரே பந்தில் 7 ரன்கள் எடுத்த சம்பவம் இப்போதுதான் நடந்துள்ளது. அந்த வகையில் இது சாதனையாகும் என்றார்.

ஆனால் உலக சாதனை படைத்த பிராத்வெய்ட் 165 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி விட்டார்.

தற்போது டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்று விட்டது.

Story first published: Wednesday, January 7, 2015, 11:29 [IST]
Other articles published on Jan 7, 2015
English summary
West Indies opener Kraigg Brathwaite has earned a footnote in cricket history after he got off the mark with a seven in the third Test against South Africa at Newlands. The batsmen ran three and gained four extra runs when wicketkeeper AB de Villiers shied at the stumps at the bowler's end and the ball went to the boundary on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X