For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத்தான்"... டோணியைப் புகழும் சீனி!

கொல்கத்தா: நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களிலேயே மிகவும் சிறந்தவர் மகேந்திர சிங் டோணிதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் டோணி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனரும், ஐசிசி தலைவருமான என் சீனிவாசன்.

டோணியை மட்டுமல்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு இருவரும் பெரும் புகழ் தேடித் தந்துள்ளனர் என்றும் சீனி கூறியுள்ளார்.

கொல்கத்தாவின் ஆனந்தபஜார் பத்ரிகா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு புகழ்ந்துள்ளார் சீனிவாசன். அந்தப் பேட்டியிலிருந்து....

சகாப்தம்

சகாப்தம்

டோணி ஒரு சகாப்தம். மாபெரும் வீரர். நான் பார்த்த வீரர்களிலேயே சிறந்தவர்.

ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி

ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி

அவருடன் இணைந்து செயல்படுவது எனக்குப் பெருமையாக உள்ளது.

வெல்லாதது என்ன இருக்கு

வெல்லாதது என்ன இருக்கு

டோணி அனைத்து முக்கியக் கோப்பைகளையும் வென்று விட்டார். டுவென்டி 20 உலகக் கோப்பை, ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்றுள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸும்தான்

இந்தியா சிமென்ட்ஸும்தான்

இந்திய கிரிக்கெட்டுக்கு என்னுடைய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நிறையச் செய்துள்ளது.

வேலை போட்டுக் கொடுத்திருக்கோம்

வேலை போட்டுக் கொடுத்திருக்கோம்

எனது நிறுவனத்தில் பல கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக கிரிக்கெட் அணியே இந்தியா சிமென்ட்ஸின் ஒரு அங்கமாக இருந்த காலமும் உண்டு என்றார் சீனிவாசன்.

கேஸ் இன்னும் முடியலை பாஸ்!

கேஸ் இன்னும் முடியலை பாஸ்!

2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த பெரும் பிக்ஸிங் ஊழலில் சிக்கி கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து உச்சநீதிமன்றத்தால் ஓரம் கட்டப்பட்டவர் சீனிவாசன். மேலும் இந்த பிக்ஸிங் விவகாரத்தில் நீதிபதி முகுல் முத்கல் கமிட்டியால் விசாரிக்கப்பட்ட 13 பேரில் சீனியும் ஒருவர். இந்த கமிட்டியின் இறுதி அறிக்கை ஓரிரு நாளில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொடர முடியுமா

தொடர முடியுமா

நவம்பர் 10ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளி்க்கவுள்ளது உச்சநீதிமன்றம். அதன் பிறகே இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை சீனிவாசன் மீண்டும் பெற முடியுமா என்பது தெரிய வரும்.

Story first published: Thursday, October 30, 2014, 13:58 [IST]
Other articles published on Oct 30, 2014
English summary
ICC boss, BCCI president-in-exile and the owner of Indian Premier League franchise Chennai Super Kings N Srinivasan heaped praise on CSK and India captain Mahendra Singh Dhoni for his impact on thew game in the country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X