ஜார்கண்ட்டில் ஷாக்! விளையாட்டு அரங்கில் மின்சாரம் தாக்கி தேசிய மல்யுத்த வீரர் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: மின்சாரம் தாக்கி தேசிய அளவிலான மல்யுத்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான தேசிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வெர்மா. இவர் கடந்த செவ்வாய்க் கிழமை ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் இயங்கி வரும் மாநில மல்யுத்த அசோசியேஷனுக்கு சென்றுள்ளார்.

மதியம் 2 மணியளவில் அங்கிருந்த கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு தொங்கிக்கொண்டிருந்த வயரில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

மரணத்தை உறுதிப்படுத்திய மருத்துவர்கள்

மரணத்தை உறுதிப்படுத்திய மருத்துவர்கள்

இதில் பலத்த காயமடைந்த விஷால் ராஞ்சி சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நீரை அகற்றியபோது..

நீரை அகற்றியபோது..

வெர்மா, ஸ்டேடியத்தில் தேங்கியிருந்த நீரை பம்ப் மூலம் அகற்றியபோது மின்சாரம் தாக்கியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாநில மல்யுத்த சங்கம் விஷால் வெர்மாவின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.

பணி வழங்கப்படும்

பணி வழங்கப்படும்

மாநில அரசு அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும் வெர்மாவின் 4 சகோதரிகளில் ஒருவருக்கு பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெர்மா மின்சாரம் தாக்கிதான் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். சங்க நிர்வாகிகள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து வருவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்பு

பல்வேறு போட்டிகளில் பங்கேற்பு

2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பில் வெர்மா பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சீனியருக்கான போட்டியில் வெர்மா 4ஆம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WWE wrestler Chyna dies at the age of 45

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
A tragic incident took place in Ranchi when Vishal Kumar Verma, a wrestler of national repute, died after being electrocuted in Jharkhand State Wrestling Association office, situated at the Jaipal Singh Stadium, on Tuesday afternoon.
Please Wait while comments are loading...