For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆள் "ஒல்லி"தான்.. ஆனால் சாதனையில் இவர் "கில்லி".. !

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த நிக்கோல் டேவிட்டைத் தெரியாத ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் இருக்க முடியாது. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக கடந்த 9 வருடமாக அசைக்க முடியாத உயரத்தில் இருந்து வருகிறார் நிக்கோல்.

இத்தனைக்கும் 31 வயதாகிறது நிக்கோலுக்கு. ஆனாலும் தொடர்ந்து தனது இடத்தை விடாமல் ஆணித்தரமாக அசத்திக் கொண்டிருக்கிறார் இந்த அட்டகாச வீராங்கனை.

தொடர்ந்து 108வது மாதமாக நிக்கோல் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். மொத்தமாக இது இவருக்கு 111வது மாதமாகும் என்பது கூடுதல் சாதனைச் செய்தியாகும்.

பினாங்கு தேவதை

பினாங்கு தேவதை

மலேசியாவின் பினாங்கில் பிறந்தவர் நிக்கோல் டேவிட். ஸ்குவாஷ் விளையாட்டில் பலருக்கும் முன்னுதாரணம் நிக்கோல்தான். அவரது ஆட்டமும், திறமையும் அபாரமானது.

2006 முதல்

2006 முதல்

2006ம் ஆண்டில் நிக்கோலின் சாதனை வரலாறு தொடங்கியது. ஆம், அந்த ஆண்டில்தான் அவர் முதல் முறையாக முதலிடத்திற்கு வந்தார். அன்று முதல் இன்று வரை அவர்தான் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

வாவ்.. ஆச்சரியம்

வாவ்.. ஆச்சரியம்

இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், இது மிகவும் விசேஷமானது. ரொம்ப ஸ்பெஷலாக உணர்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை. 9 வருடமாக நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன் என்பது ஆச்சரியமாக உள்ளது. காலம் வேகமாக ஓடி விட்டது.

இன்னும் கற்கிறேன்

இன்னும் கற்கிறேன்

எல்லாம் கற்று முடித்து விட்டதாக இப்போது வரை நான் கருதுவதில்லை. தொடர்ந்து கற்கிறேன். கற்றலுக்கு வயது கிடையாது. விளையாட்டிலிருந்து நான் எப்போது விலகுவேன் என்று தெரியவில்லை. இப்போதைக்கு அது இல்லை என்று மட்டும் தெரிகிறது என்றார் நிக்கோல்.

சவால்கள் அதிகம்

சவால்கள் அதிகம்

தற்போது உள்ள வீராங்கனைகள் குறித்து நிக்கோல் கூறுகையில், இப்போது நிறைய வீராங்கனைகள் சவாலாக உள்ளனர். கடுமையான போட்டியைத் தருகிறார்கள். ஆனால் நான் சவாலுக்குத் தயாராகவே இருக்கிறேன் என்றார்

நெருங்கி வரும் வெலிலி

நெருங்கி வரும் வெலிலி

தொடர்ந்து 9வது வருடமாக நிக்கோல் முதலிடத்தில் இருந்து வந்தாலும் கூட எகிப்து வீராங்கனை ரனீம் எல் வெலிலி என்பவர் நிக்கோலை சற்று நெருங்க வந்துள்ளார் புள்ளிகள் அளவில். எனவே சற்று முயன்றால் இவர் நிக்கோலை பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளது.

டாப் 10ல் இந்தியர் இல்லை

டாப் 10ல் இந்தியர் இல்லை

இதற்கிடையே டாப் 10 வீராங்கனைகள் வரிசையில் இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மட்டுமே டாப் 20க்குள் வருகிறார்.

Story first published: Friday, July 3, 2015, 13:36 [IST]
Other articles published on Jul 3, 2015
English summary
31-year-old Malaysian Nicol David has maintained her hold on the Women’s World No.1 ranking for a remarkable 108th consecutive month, and 111th month altogether, after topping the July 2015 Women’s World Rankings – meaning the Penang-born star celebrates an incredible nine-years uninterrupted as the number one player in women’s squash.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X