For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினை இப்படி அசிங்கப்படுத்தலாமா சங்ககாரா?

By Veera Kumar

லண்டன்: உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிக செஞ்சுரிகளை விளாசியவர், வேகப்பந்து, சுழற்பந்து என அனைத்து வகை பந்துகளையும் துவம்சம் செய்தவர் என்ற பெருமைக்குறிய சச்சின் டெண்டுல்கரை, இலங்கை முன்னாள் வீரர், குமார் சங்ககாரா இப்படி கைவிட்டுவிட்டாரே என்று புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

உலகின் டாப் சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை வழங்குமாறு, கிரிக்கெட்டின் மெக்கா என புகழப்படும் லண்டன் லாட்ஸ் மைதான நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இதன்படி பல்வேறு முன்னணி வீரர்களும், தங்களின் ஆல்-டைம் ஃபேவரைட் வீரர்களின் 11 பேர் கொண்ட பட்டியலை வழங்கி வருகிறார்கள்.

பட்டியலில் பெயர் இல்லை

ஓய்வுபெற்ற இலங்கை, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குமார் சங்ககாரவும் ஒரு பட்டியலை தயாரித்துள்ளார். அது லாட்ஸ் மைதான டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயர் இடம்பெறவில்லை.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் மற்றும் இந்தியாவின் ராகுல் டிராவிட் ஆகியோரை ஓப்பனிங்கில் களமிறக்க ஆசைப்படுவதாகவும், முதல் பந்தை ஹேடன் சந்திக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார் சங்ககாரா.

லாரா, பாண்டிங்

லாரா, பாண்டிங்

இந்த பட்டியலில் ஒன்டவுன் இறங்கும் வாய்ப்பை லாராவுக்கு வழங்கியுள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸை போலவே, லாராவையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள சங்ககாரா, 4வதாக களமிறங்கும் வாய்ப்பை ரிக்கி பாண்டிங்கிற்கு கொடுத்துள்ளார்.

அரவிந்த் டிசில்வா

அரவிந்த் டிசில்வா

மிடில் ஆர்டரின் முக்கிய பகுதியான 5வது இடத்தை, மகிளா ஜெயவர்த்தனேவுக்கு தருவதா அல்லது 1996ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் கலக்கிய, சக நாட்டு வீரரான அரவிந்த டி சில்வாவுக்கு தருவதா என்று நீண்ட நேரம் சிந்தித்ததாகவும், ஜெயவர்த்தனேவே பாராட்டிய டி சில்வாவுக்கு அந்த இடத்தை தந்துள்ளதாகவும் சங்ககாரா கூறியுள்ளார்.

வார்னே, முரளி

வார்னே, முரளி

6வது இடத்தை ஜேக் கல்லீசுக்கும், அதற்கு அடுத்த இடத்தை ஆடம் கில்கிறிஸ்டுக்கும் கொடுத்துள்ள, சங்ககாரா, ஸ்பின்னர்களில் தனது ஆல்-டைம் ஃபேவரைட் வீரர்களான முத்தையா முரளீதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில் வாசிம் அக்ரமை எளிதாக தேர்ந்தெடுத்த சங்ககாராவால் இலங்கையின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான சமிந்தா வாஸ் அல்லது ஆஸி. வேகம், மெக்ராத் ஆகிய இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என குழப்பம் இருந்ததாம், இறுதியாக சமிந்தா வாஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆஸி.க்கு அதிக இடம்

ஆஸி.க்கு அதிக இடம்

சங்ககாராவின் கனவு அணியில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாஜி வீரர்கள் அதிகம். நான்கு பேர் ஆஸி.க்கள். அடுத்தபடியாக 3 வீரர்கள் இலங்கையர்கள். இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தலா 1 வீரர்களுக்கு 11 பேர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

Story first published: Tuesday, June 28, 2016, 17:19 [IST]
Other articles published on Jun 28, 2016
English summary
Former Sri Lankan captain Kumar Sangakkara today (June 28) picked his all-time XI which featured only one Indian in Rahul Dravid.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X