For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அமோக வரவேற்பு.. பங்கேற்பில் வீரர்கள் சாதனை

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் நேற்று தொடங்கியது. வரும் 18ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க 19 வீரர் வீராங்கனையில் பிரேசில் நாட்டுக்கு சென்றுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் அண்மையில் முடிந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நேற்று தொடங்கின.

இதில் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தொடரில், 160 நாடுகளில் இருந்து 4400க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

அகதிகள்

அகதிகள்

இதில் அகதிகள் இருவரும் அடங்குவர். இவர்களுக்கு எந்த நாடும் சொந்தம் இல்லை என்ற நிலை உள்ளதால், சர்வதேச பாரா ஒலிம்பிக் தடகள கொடியின்கீழ் ஆடுவார்கள்.

வீராங்கனைகள் சாதனை

வீராங்கனைகள் சாதனை

செப்டம்பர் 7 முதல் 18 வரை நடைபெற உள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்கும் தடகள வீரர்களின் மொத்த எண்ணிக்கை 4432. இதில் 1621 பேர் பெண்கள் என்பது புது சாதனை. கடந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைகளைவிட இதது 12 சதவீதம் அதிகம். 20 வருடங்களுக்கு முன்பு அட்லாண்டாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இது இரு மடங்காகும்.

முதலில் சுணக்கம்

முதலில் சுணக்கம்

பிரேசிலில் பொருளாதார மந்தம் நிலவி வரும் நிலையில், டிக்கெட் விற்பனை முதலில் மோசமாக இருந்தது. பட்ஜெட்டும் குறைக்கப்பட்டது. இதையெல்லாம் மீறி மீண்டு வந்து இப்போட்டிகளை நடத்துகிறோம் என்கிறார் பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஃபிலிப் கிராவன்.

பலே ஜோர்

பலே ஜோர்

ஆனால் பின்னர் டிக்கெட் விற்பனை வேகமெடுத்துள்ளது ஒலிம்பிக் கமிட்டியை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது. 2008ல் பீஜிங்கில் விற்பனையான டிக்கெட்டுகள் எண்ணிக்கை 2.4 மில்லியன். அதை இம்முறை ரியோ டி ஜெனிரோ ஓவர்-டேக் செய்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

லைவ் டெலிகாஸ்ட்

லைவ் டெலிகாஸ்ட்

இந்த போட்டிகள் 154 நாடுகளில் தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாம். லண்டன் பாரா ஒலிம்பிக் ஒளிபரப்பப்பட்ட நாடுகள் எண்ணிக்கையைவிட இது 39 அதிகம்.

Story first published: Thursday, September 8, 2016, 13:19 [IST]
Other articles published on Sep 8, 2016
English summary
4,432 athletes from 160 countries and regions will compete at the Rio Paralympic Games, which officially opened at the Maracana Stadium on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X