For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை குத்தலையோ பச்சை.. ஒலிம்பிக் பச்சை!

ரியோ டி ஜெனீரோ: ரஜினி படம் வெளியானால் அது எப்படி ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல மாறி விடுகிறதோ அதேபோலத்தான் சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக் ஒரு மாபெரும் விழாவாக காட்சி தருகிறது. ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே பெரும் சாதனை என்பதால் அதில் கலந்து கொள்வதை நினைவில் வைத்துக் கொள்ள விதம் விதமான உத்திகளை வீரர்களும், வீராங்கனைகளும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் பச்சை குத்திக் கொள்வது அதாவது டாட்டூ. வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்தியில் இந்த டாட்டூ மோகம் குறிப்பாக ஒலிம்பிக் தொடர்பான டாட்டூ மோகம் அதிகமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு போட்டித் தொடரையும் நினைவில் வைத்துக் கொள்ள வித்தியாசமான முறையில் டாட்டூ பொறித்துக் கொள்கின்றனராம். அதுகுறித்த ஒரு உலா இது.

மிஸ்ஸி(யம்மா) பிராங்க்ளின்!

மிஸ்ஸி(யம்மா) பிராங்க்ளின்!

இவர் மிஸ்ஸி பிராங்க்ளின். அமெரிக்காவின் பிரபலமான நீச்சல் வீராங்கனை. இவர் ஒலிம்பிக் வளையத்தை தனது இடுப்புக்குக் கீழே தொடைக்கு மேலே பொறித்து வைத்துள்ளார். அதே வண்ணத்தில்.

லியா நியால்

லியா நியால்

இது லியா நியால். அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரும் நீச்சல் வீராங்கனைதான். 2012 ஒலிம்பிக்தான் இவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டி. அதில் அவர் 4×100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அப்போது பொறித்த பச்சையாம் இது.

ஸ்டெபானி ரைஸ்

ஸ்டெபானி ரைஸ்

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஸ்டெபானி. இவர் இரண்டு முறை ஒலிம்பிக்குக்காக தனது வலது கையில் பச்சை குத்தியுள்ளார். 2008 சிட்னி ஒலிம்பிக் போட்டியின்போது முதல் முறையாக பச்சை குத்தினார். அந்தப் போட்டியில் அவர் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

2வது முறையாக

2வது முறையாக

2வது முறையாக அவர் பச்சை குத்தியது 2012 ஒலிம்பிக் போட்டியின்போது. ஏற்கனவே பச்சை குத்திய இடத்திற்குக் கீழே இந்தப் பச்சையைக் குத்தினார் ஸ்டெபானி. இந்த முறையும் குத்தியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

காத்லீன்

காத்லீன்

இவர் காத்லீன் ஹெர்சி. இவரும் அமெரிக்க நீச்சல் வீராங்கனைதான். 2912 ஒலிம்பிக் போட்டியின்போது தனது இடுப்புக்கு கீழே அவர் ஒலிம்பிக் வளையத்தைப் பச்சை குத்தியிருந்தார். அந்தப் போட்டியில் இவர் 4வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை ராணி

குத்துச்சண்டை ராணி

இவர் அமெரிக்காவின் குவானிட்டா அன்டர்வுட். க்வீன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். குத்துச் சண்டை வீராங்கனை. 2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர். அப்போது பொறித்துக் கொண்ட டாட்டூ இது. இவர் எந்தப் போட்டியில் கலந்து கொண்டாலும் உடனே பச்சை குத்திக் கொள்வாராம்.

Story first published: Sunday, July 24, 2016, 15:02 [IST]
Other articles published on Jul 24, 2016
English summary
Many players are rocking the Rio Olympics with tattoos on their body. Most of them have tattooed the Olympic rings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X