For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மின்னல் வேகத்தில் நெய்மார்.. இறுதிப் போட்டியில் பிரேசில்.. ஜெர்மனியை உதைக்க தயார்!

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் கால்பந்தாட்டத்தில் ஹோண்டூராஸ் அணியை பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இப்போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரரும், கேப்டனுமான நெய்மர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிவேக கோல் அடித்து ஒலிம்பிக்ஸில் வரலாற்றுச் சாதனை படைத்தார்.

ரியோ ஒலிம்பிக்ஸ் கால்பந்தாட்டத்தின் அரையிறுதியில் பிரேசியில் அணி ஹோண்டூராஸ் அணியை எதிர் கொண்டது. நெய்மர் ஆட்டம் தொடங்கி 15-வது விநாடியில் கோல் அடித்து அதிவேக தொடக்க கோலுக்கான ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தியதோடி மேலும் ஒரு கோலையும் அடித்தார்.

Rio Olympics 2016: Neymar creates history as Brazil thrash Honduras 6-0

ஆட்டம் தொடங்கிய 15-வது விநாடியிலேயே ஹோண்டுராஸ் தடுப்பாட்ட வீரர் ஜானி பலேசியாசிடமிருந்து பந்தை பறித்துச் சென்ற நெய்மர், அபாரமாக கோல் அடித்தார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதன் பின்னரும் பிரேசிலின் ஆதிக்கம் தொடரவே 6-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது பிரேசில்.

பிரேசில் இறுதிப்போட்டியில் ஜெர்மனியைச் சந்திக்கிறது. 2014 உலகக்கோப்பையில் 7-1 என்ற கோல் கணக்கில் தங்கள் சொந்த மண்ணில் தங்களை மண்ணைக் கவ்வ வைத்த ஜெர்மனியை வீழ்த்த இன்னொரு சந்தர்ப்பம் பிரேசில் அணிக்குக் கிடைத்துள்ளது. சனிக்கிழமையன்று பிரேசில்-ஜெர்மனி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

Story first published: Thursday, August 18, 2016, 12:11 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
Brazil advanced to the final of Rio Olympics 2016 men's football after thrashing Honduras 6-0 in a semi-final game on Wednesday (August 18)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X