For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"ஏட்டையாக்கள்" ஸ்டிரைக்... ஒலிம்பிக் பாதுகாப்பு குறித்து பிரேசில் அரசு கவலை!

ரியோ டிஜெனீரோ: ரியோ டிஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் புது சிக்கல் எழுந்துள்ளது. அங்குள்ள காவல்துறையினர் தங்களுக்குரிய சிறப்பு சம்பளத்தை பிரேசில் அரசு கொடுக்காமல் தாமதம் செய்து வருவதால் அவர்களில் ஒரு பிரிவினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனராம். இதனால் பாதுகாப்பு குறித்து பிரேசில் அரசு கவலையில் மூழ்கியுள்ளது.

கடந்த வாரம் ரியோ விமான நிலையத்தில் போலீஸார் திடீர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

'ஒலிம்பிக்கைப் பார்க்க வரும் வெளிநாட்டவர்களே மறுபடியும் பத்திரமாக திரும்பிப் போவதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் அவர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுலாப் பயணிகள்...

சுற்றுலாப் பயணிகள்...

கடந்த வாரம் முதலே ரியோவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பலரும் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க இப்போதே வர ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் ரியோ போலீஸார் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.

வெல்கம் டு ஹெல்...

வெல்கம் டு ஹெல்...

வெல்கம் டு ரியோ என்று வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளுக்குக் கீழே போலீஸ் சார்பில் வெல்கம் டு ஹெல் ( நரகம்) என்ற பதாகைகளை வைத்து வருகின்றனர். இதனால் பிரேசில் அரசுக்குத் தர்மசங்கடமாகியுள்ளது.

சம்பளம் வேண்டும்...

சம்பளம் வேண்டும்...

எங்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும். தராவிட்டால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாட்டோம். இதில் சமரசமே கிடையாது. இந்த சமயத்தில்தான் நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்த முடியும் என்று போலீஸார் கூறுகின்றனர்.

போலீசார் கொலை...

போலீசார் கொலை...

மேலும் இந்த ஆண்டில் மட்டும் பிரேசிலில் 54 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். திருடர்கள், கொள்ளையர்கள் என பல தரப்பினரால் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே பணி பாதுகாப்பு கோரியும் ஸ்டிரைக் நடக்கிறது. மேலும் ரியோவைப் பாதுகாக்கத் தேவையான நவீன வசதிகளை அரசு செய்து தரவில்லை என்பதும் போலீஸின் குற்றச்சாட்டாகும்.

குழப்பம்...

கூடுதல் நேரம் வேலை பார்த்தால் ஓவர் டைம் சம்பளம் தருவதில்லை என்பதும் போலீஸாரின் இன்னொரு குற்றச்சாட்டு. ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்குகின்றன. அன்று பிரமாண்ட தொடக்க விழா நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். இந்த நிலையில் போலீஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் பிரேசில் அரசு குழப்பமடைந்துள்ளது.

Story first published: Friday, July 8, 2016, 10:47 [IST]
Other articles published on Jul 8, 2016
English summary
“Welcome to Hell” – that’s how one contingent of Brazil’s striking civil police force greeted arrivals at Rio’s international airport, just weeks before the 2016 Summer Olympic games begin.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X