For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர்ப்ஸ்-ன் டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியல்... ரோஜர் பெடரர் முதலிடம்

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் தொடர்பான போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் இந்தாண்டு அதிகம் பணம் சம்பாதித்த டென்னிஸ் வீரர்கள் குறித்த பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டது. இதன்படி டாப் 10 வரிசையில் முதலிடத்தை பெடரர் பிடித்துள்ளார்.

17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர் இந்தாண்டு நோவக் ஜோகோவிக்கிடம் பட்டத்தைத் தவற விட்டார். ஆனபோதும் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் ரோஜர்...

முதலிடத்தில் ரோஜர்...

கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் பெடரர் ஈட்டியுள்ள மொத்த வருமானம் 56.2 மில்லியன் டாலர் ஆகும். இது இந்திய மதிப்பில் 340 கோடி ரூபாய்.

விளம்பரதாரர்கள் மூலம்...

விளம்பரதாரர்கள் மூலம்...

ரோலக்ஸ் மற்றும் நைக் போன்ற விளம்பரதாரர்களின் வழியே ரோஜர் ஈட்டியுள்ள வருமானம் 40 மில்லியன் அமெரிக்க டாலரை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

பாதிக்கு பாதி...

பாதிக்கு பாதி...

போபர்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் 5 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் இடம் பிடித்துள்ளனர்.

2வது, 3வது இடத்தில்...

2வது, 3வது இடத்தில்...

ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் 44.5 மில்லியன் அமெரிக்க டாலருடன் 2வது இடத்திலும், செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிக் 33.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

மரியா ஷரபோவா....

மரியா ஷரபோவா....

அதேபோல், 4வது இடத்தில் 24.4 மில்லியன் அமெரிக்க டாலருடன் மரியா ஷரபோவாவும், சீனாவின் லீ நா 23.6 மில்லியன் அமெரிக்க டாலருடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

செரீனா வில்லியம்ஸ்...

செரீனா வில்லியம்ஸ்...

டென்னிஸ் போட்டியில் உலக தர வரிசையில் பெண்கள் பிரிவில் முதலிடம் வகிக்கும் செரீனா வில்லியம்ஸ் 22 மில்லியன் அமெரிக்க டாலருடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது வருமானத்தில் பாதி பரிசு வழியாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7வது, 8வது இடங்களில்...

7வது, 8வது இடங்களில்...

இங்கிலாந்து நாட்டின் ஆண்டி முர்ரே 19.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் 7வது இடத்திலும், விக்டோரியா அசரென்கா 11.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் 8வது இடத்திலும் உள்ளனர்.

கடைசி இடத்தில் கரோலின்...

கடைசி இடத்தில் கரோலின்...

மேலும், இந்தப் பட்டியலில் ஜப்பானின் கீய் நிஷிகோரி 11 மில்லியன் அமெரிக்க டாலருடன் 9வது இடத்தையும், டென்மார்க் நாட்டின் கரோலின் வோஸ்னியாக்கி 10.8 மில்லியன் அமெரிக்க டாலருடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Story first published: Tuesday, August 26, 2014, 18:43 [IST]
Other articles published on Aug 26, 2014
English summary
Roger Federer has not won a Grand Slam title this year but the 17-time Grand Slam champion topped Forbes magazine's list of the 10 top tennis moneymakers announced on Monday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X