For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்றுச் சாதனை... சத்னம் சிங் பமராவுக்கு சச்சின், அமிதாப் புகழாரம்!

டெல்லி: அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டக் கழக போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள சத்னம் சிங் பமராவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சத்னமின் தேர்வு இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பெருமை தரக் கூடியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம் என்று சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பஞ்சாப்...

பஞ்சாப்...

19 வயதேயாகும் சத்னம் பஞ்சாபைச் சேர்ந்தவர். செம உயரமானவர். அதாவது 7 அடி 2 அங்குலம் உயரம் உடையவர். சச்சின் இவர் பக்கத்தில் நின்றபோது சத்னமின் இடுப்புக்கு சற்று மேல் வரைதான் சச்சின் இருக்கிறார்.

52வது வீரர்...

52வது வீரர்...

டல்லாஸ் மேவரிக் என்ற என்பிஏ அணிக்காக ஆடப் போகிறார் சத்னம் சிங். இந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 52வது வீரர் சத்னம் ஆவார்.

பெருமிதமான தருணம்...

பெருமிதமான தருணம்...

சத்னம் குறித்து சச்சின் கூறுகையில், ‘அவருக்காக நான் பெருமைப்படுகிறேன். மிகப் பெரிய சாதனை இது. இந்திய விளையாட்டுத் துறைக்கும், வீரர்களுக்கும் பெருமிதமான தருணம் இது.

பெருமை...

பெருமை...

அவருக்காக நாங்கள் அனைவருமே பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். அவர் மிகச் சிறந்த சீசனை அனுபவிக்க வாழ்த்துகிறேன். ஒட்டுமொத்த தேசமும் சத்னமுக்கு ஆதரவாக இருக்கும்' என்றார் சச்சின்.

வாழ்த்து மழை...

வாழ்த்து மழை...

இதேபோல மத்திய அமைச்சரும், 2004 ஒலிம்பிக் பட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்த்தன் ரத்தோரும் சத்னம் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகள்...

ஐபிஎல் கிரிக்கெட் அணிகள்...

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற ஐபிஎல் கிரிக்கெட் அணிகளும் கூட சத்னமை வாழ்த்தியுள்ளன.

அமிதாப்...

அமிதாப்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சத்னமை வாழ்த்தியுள்ளார். ‘இந்தியா இதுவரை என்பிஏவை பார்த்து ரசித்தது. இனி என்பிஏ இந்தியாவைப் பார்த்து ரசிக்கும்' என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

Story first published: Sunday, June 28, 2015, 15:35 [IST]
Other articles published on Jun 28, 2015
English summary
The sporting fraternity on Friday congratulated hoopster Satnam Singh Bhamara after he became the first Indian to be picked for an NBA (National Basketball Association) League team, hailing his historic achievement as an "inspiration" for the youth of the country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X