For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் கையில் மீண்டும் "அம்பாசடரை" கொடுத்த ஐசிசி!

துபாய்: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா -நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சச்சினை இதன் மூலம் விளையாட்டுக் களத்திற்கு மீண்டும் இழுத்து வந்துள்ளது ஐசிசி - இருப்பினும் சச்சின் பேட் செய்ய மாட்டார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

சச்சினை அம்பாசடராக நியமிக்கும் அறிவிப்பை துபாயில் வைத்து ஐசிசி வெளியிட்டுள்ளது. 2வது முறையாக தொடர்ந்து பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்படுகிறார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய அம்பாசடர்

பழைய அம்பாசடர்

கடந்த முறை 2011ம் ஆண்டு, இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்திய உலகக் கோப்பைத் தொடருக்கும் இவரே அம்பாசடராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது - அந்த வகையில் இவர் ஒரு பழைய அம்பாசடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புரோமஷன்களில்

புரோமஷன்களில்

அம்பாசடர் என்ற வகையில் உலகக் கோப்பைக் குறித்த ஐசிசியின் புரமோஷன்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் சச்சின் பங்கேற்பார். உலக அளவில் மிகப் பெரிய 3வது விளையாட்டு போட்டி என்ற பெயரைப் பெற்றுள்ள உலக்க கோப்பைத் தொடர் ஜூரம் ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பரவி வருகிறது. இப்போது சச்சினும் இந்தத் தொடரில் அம்பாசடர் என்ற வகையில் இணைவது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் என்று நம்பலாம்.

24 வருஷமா...!

24 வருஷமா...!

சச்சின் கடந்த ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டுவென்டி 20 போட்டிகளில் இவர் ஆடியுள்ளார். இவரது ரன் குவிப்பு மிகப் பெரியது. அதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 24 வருடம் கிரிக்கெட் ஆடி வந்த சாதனையாளர் சச்சின்.

அடேங்கப்பா ரன் குவிப்பு

அடேங்கப்பா ரன் குவிப்பு

சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 34, 357 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின். இதில் 100 சதங்களும் அடக்கம். உலகக் கோப்பைக்காக மொத்தம் 6 உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களை சந்திக்க வேண்டியதாகி விட்டது இந்த ரன் மெஷினுக்கு.

6 வது முறைதான்

6 வது முறைதான்

கடைசி முயற்சியாக 2011ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில்தான் அது கை கூடியது. ஆனாலும் கூட இந்த உலகக் கோப்பை நமக்குக் கிடைக்க ஜாகீர் கான், யுவராஜ் சிங், டோணி என மற்ற வீரர்களே முக்கியக் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படியோ, கப்போடு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முழுமை அடைந்தார் சச்சின்.

அதிக ரன் குவித்தவர்

அதிக ரன் குவித்தவர்

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன் குவித்த சாதனையாளரும் சச்சின்தான். மொத்தம் 45 போட்டிகளில் 2278 ரன்களை அவர் குவித்துள்ளார். அதிலும் 2003 போட்டித் தொடரில் இவர் 673 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். ஆனால் அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படு கேவலமாக தோற்றுப் போனது இந்தியா. இறுதிப் போட்டியில் மட்டும் சச்சின் சரியாக ஆடவில்லை.

மகிழ்ச்சி - கெளரவம்

மகிழ்ச்சி - கெளரவம்

பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து சச்சின் மகிழ்ச்சி தெரிவி்த்துள்ளார். இதை கெளரவமாக கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 23, 2014, 6:15 [IST]
Other articles published on Dec 23, 2014
English summary
The International Cricket Council (ICC) on Monday announced Sachin Tendulkar as the World Cup 2015 Ambassador. It will be the second successive time that the Indian batting legend will be the Ambassador of ICC's pinnacle tournament, after he fulfilled the role in the previous event, which was co-hosted by Bangladesh, India and Sri Lanka in 2011 and also won the trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X