For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராட்மேன் மியூசியத்திற்கு நாளை விசிட் அடிக்கும் "குட்டி" பிராட்மேன்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள பிராட்மேன் அருங்காட்சியத்திற்கு நாளை செல்கிறார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

இதுகுறித்து சிட்னியில் உள்ள பிராட்மேன் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது சிட்னிக்கு வந்துள்ளார் சச்சின்.

நாளை அவர் பிராட்மேன் அருங்காட்சியகம் மற்றும் அருங்காட்சிய வளாகத்தில் உள்ள மாபெரும் கிரிக்கெட் வீரர்கள் அரங்கத்திற்கும் (கிரிக்கெட் ஹால் ஆப் பேம்) செல்கிறார் சச்சின்.

பிராட்மேன் கெளரவம்

பிராட்மேன் கெளரவம்

நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோருக்கு 2014ம் ஆண்டுக்கான பிராட்மேன் கெளரவ விருது அளிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணம்

ஹெலிகாப்டரில் பயணம்

அதைத் தொடர்ந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பிராட்மேன் அருங்காட்சியத்திற்கு சச்சின் அழைத்துச்செல்லப்படவுள்ளார். அதேசமயம், அருங்காட்சியகத்திற்கு சச்சின் மட்டுமே செல்கிறார். ஸ்டீவ் வாக் வரவில்லை.

இரவு விருந்து

இரவு விருந்து

இதையடுத்து இரவு சிட்னி கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெறும் மாபெரும் இரவு விருந்தில் சச்சின் பங்கேற்கிறா். இந்த விருந்தில் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இருப்பினும் இந்த விருந்தில் ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் மட்டும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுடன் கிரிக்கெட்

மாணவர்களுடன் கிரிக்கெட்

பிராட்மேன் அருங்காட்சியக விசிட்டின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களையும் சந்தித்துப் பேசுகிறார் சச்சின். அவர்களுடன் கிரிக்கெட் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 ஜாம்பவான்களில் ஒருவர்

20 ஜாம்பவான்களில் ஒருவர்

பிராட்மேன் அருங்காட்சியக வளாகத்திலேயே சர்வதேச கிரிக்கெட் பிரபலங்களின் புகைப்படங்கள் அடங்கிய அரங்கு அமைந்துள்ளது. அதில் உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 20 ஜாம்பவான்களின் படங்கள் அதில் உள்ளன. அதில் சச்சினும் ஒருவர் ஆவார்.

வேல்ஸ் சுற்றிக் காட்டுவார்

வேல்ஸ் சுற்றிக் காட்டுவார்

பிராட்மேன் அருங்காட்சியகத்தை அதன் காப்பாளர் டேவிட் வேல்ஸ் சுற்றிக் காட்டி ஒவ்வொன்றையும் சச்சினுக்கு விளக்கிக் கூறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்மேனால் புகழப்பட்டவர்

பிராட்மேனால் புகழப்பட்டவர்

பிராட்மேன் உயிருடன் இருந்தபோது அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்த ஒரு சில இப்போதைய தலைமுறை வீரர்களில் சச்சினும் அடக்கம். மேலும் சச்சின் விளையாடும் விதத்தை பிராட்மேனே வெகுவாகப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 29, 2014, 13:04 [IST]
Other articles published on Oct 29, 2014
English summary
Former India captain and batting legend Sachin Tendulkar will visit the Bradman Museum and International Cricket Hall of Fame on Thursday (October 30), the Bradman Foundation announced. Tendulkar, who landed in Sydney on Tuesday (October 28), will be inducted as the 2014 Bradman Honouree along with former Australian skipper Steve Waugh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X