For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் காலிறுதியில் நடப்பு சாம்பியன் சாய்னா அதிர்ச்சி தோல்வி!

By Veera Kumar

சிட்னி: ஆஸ்திரேலிய சாம்பியன் பாட்மிண்டன் காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான, இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த சுன் யு-வை எதிர்கொண்டார்.

Saina Nehwal knocked out of Australian open super series

21-19, 19-21, 21-14 என்ற செட் கணக்கில், சுன் யு-வை வீழ்த்தி சாய்னா வெற்றியை வசப்படுத்தினார். இதில் முதல் செட்டை சாய்னா 21-19 எனக் கைப்பற்றினார். 2வது செட்டில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய சீன வீராங்கனை சுன் யு 21-19 என அந்த செட்டை கைப்பற்றினார். சாய்னா மூன்றாவது செட்டை 21-14 என எளிதில் வென்று 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சாய்னா நேவால், சீனாவின் ஷிக்சியான் வாங்-கை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வாங்க், 15க்கு 21 மற்றும் 13க்கு 21 என்ற நேர் செட்களில் சாய்னாவை எளிதாக வெற்றி கண்டார். இதனால், நடப்பு சாம்பியன் சாய்னா நேவால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Story first published: Friday, May 29, 2015, 13:39 [IST]
Other articles published on May 29, 2015
English summary
Saina Nehwal crashed out of the Australian Open Superseries after losing her quarterfinal clash to Chinese Shixian Wang 15-21, 13-21 at the Sydney Olympic Park on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X