For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்

ஹைதராபாத்: நமது நாட்டில் அரசியல்வாதிகள் எல்லாம் மிகவும் சில்லியாக உள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை இதில் சேர்க்க முடியாது. அவர் மிகச் சிறந்த தலைவராக விளங்குகிறார் என்று டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா கூறியுள்ளார்.

நான் 2010ம் ஆண்டிலேயே டென்னிஸை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் பின்னர் அதைக் கைவிட்டு விட்டேன் என்றும் சானியா கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கொட்டித் தீர்த்து விட்டார் சானியா. அவரது பேட்டியிலிருந்து...

இதுவரை இல்லாத ஆட்டம்

இதுவரை இல்லாத ஆட்டம்

இந்த நிமிடத்தில் நான் இதுவரை ஆடாத சிறந்த டென்னிஸை ஆடி வருகிறேன். அனுபவித்து விளையாடி வருகிறேன்.

ஓய்வுக்கு திட்டமிட்டேன்

ஓய்வுக்கு திட்டமிட்டேன்

ஆனால் 2010ம் ஆண்டு நான் விளையாட்டிலிருந்து விலக நினைத்தேன். முடிவு கூட எடுத்து விட்டேன். ஆனால் பின்னர் அதை விட்டு விட்டேன். இப்போது நான் சிறப்பாக ஆடி வருவது மகிழ்ச்சி தருகிறது. எனது மன மாற்றத்திற்கு எனக்கு நானே நன்றி கூறிக் கொள்கிறேன்.

நம்பர் ஒன் கனவு

நம்பர் ஒன் கனவு

அடுத்த வரும் நான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதை நோக்கி பயணித்து வருகிறேன். அதை சாதிப்பேன் என்றும் நம்புகிறேன்.

இப்ப ஓ.கே.. நாளைக்கு தெரியாது

இப்ப ஓ.கே.. நாளைக்கு தெரியாது

இந்த நாள், இந்த நிமிடம் எனக்கு நன்றாக உள்ளது. நான் கடந்த காலத்தில் வாழ்பவள் அல்ல. அடுத்து என்ன நடக்கும் என்பதையும் நான் யோசிக்கவும் மாட்டேன்.

எனது தேசப் பற்று

எனது தேசப் பற்று

எனது தேசப் பற்று குறித்து சிலர் கேள்வி கேட்டபோது நான் உணர்ச்சிசப்பட்டேன். உண்மைதான்.

சில்லி

சில்லி

அவர்கள் மிகவும் சில்லியானவர்கள், சின்னப்புத்தி படைத்தவர்கள். அதை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

பிரதமருக்கு நன்றி

பிரதமருக்கு நன்றி

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். அவர் மாபெரும் தலைவர். அருமையான தலைவர். அவரை 2 முறை பார்த்துள்ளேன். அவ்வப்போது அவர் எனக்கு டிவிட் செய்வார். நான் வெல்லும்போதெல்லாம் வாழ்த்துவார் என்றார் சானியா.

Story first published: Tuesday, October 28, 2014, 17:36 [IST]
Other articles published on Oct 28, 2014
English summary
Sania Mirza revealed on Tuesday that she had planned to retire from tennis in 2010. The 27-year-old, however, said that she is currently playing the "best tennis ever" and that she is past recent political remarks which questioned her patriotism. Sania won the WTA Finals in Singapore with her Zimbabwean partner Cara Black.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X