For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியை பீரோவுக்குள் ஒளித்து வைத்த கிரிக்கெட் வீரர்....!

கராச்சி: 1999ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது தனது மனைவியை ரகசியமாக தான் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு வரவழைத்து அவரை பீரோவுக்குள் வைத்து பூட்டி யார் கண்ணிலும் படாமல் வைத்திருந்ததாக முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியின்போது பெரும்பாலான அணிகள் வீரர்களுடன் மனைவி அல்லது காதலி வருவதைத் தடை செய்கின்றன். இந்திய அணி கூட ஒருபோதும் மனைவி, காதலியை வீரர்களுடன் தங்குவதற்கு அனுமதித்தில்லை.

இந்த நிலையில் கடந்த 1999ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது தனது மனைவி ரகசியமாக வரவழைத்து அவரை தனது அறையிலேயே தங்க வைத்துள்ளார் சக்லைன் முஷ்டாக். அதுவும் பீரோவில் பூட்டி வைத்து!

இதுகுறித்து சக்லைன் கூறியுள்ளதாவது:

மனைவியருக்கு திடீர் தடை

மனைவியருக்கு திடீர் தடை

1999ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது அரை இறுதிக்கு முன்பு வரை எங்களுடன் மனைவியர் மற்றும் குடும்பத்தினர் தங்க கிரிக்கெட் வாரியம் அனுமதித்திருந்தது. ஆனால் அரை இறுதிக்கு முன்பு அவர்களைத் தடை செய்து விட்டது.

உன்னை விட மாட்டேன்

உன்னை விட மாட்டேன்

இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் எனது மனைவி சனாவை திரும்ப அனுப்ப நான் விரும்பவில்லை. இதையடுத்து அவரிடம், உன்னை நான் திருப்பி அனுப்பப் போவதில்லை. நீயும் என் கூடவே இரு என்று கூறினேன். பிறகு ரகசியமாக சில விஷயங்களை அவரிடம் தெரிவித்தேன்.

பீரோவுக்குள்

பீரோவுக்குள்

நாங்கள் தங்கும் ஹோட்டல்கள் குறித்த விவரத்தை அவருக்கு முன்கூட்டியே தெரிவித்து அவரை முன்கூட்டியே அங்கு போய்த் தங்கச் சொன்னேன். பிறகு அங்கு போனதும் எனது அறைக்கு வரவழைத்துக் கொள்வேன். மேனேஜரோ அல்லது பயிற்சியாளரோ வந்து கதவைத் தட்டினால் எனது மனைவியை பீரோவுக்குள் ஒளிந்து கொள்ளச் சொல்வேன்.

கண்டுபிடிச்ச சக வீரர்கள்

கண்டுபிடிச்ச சக வீரர்கள்

ஒருமுறை சக வீரர்களான முகம்மது யூசுப்பும், அஸார் மகமூதுவும் அறைக்கு வந்தனர். வழக்கம் போல சனாவை பீரோவுக்குள் அனுப்பி வைத்து விட்டேன். சிறிது நேரம் கழித்து யூசுப்பும், அஸாரும் சிரிக்க ஆரம்பித்தனர். என்ன என்று கேட்டபோது, உன் மனைவி இங்கே இருப்பது எங்களுக்குத் தெரியும். பாவம், அவரை வெளியே வரச் சொல் என்றனர். இதையடுத்து நானும் சிரித்தபடி எனது மனைவியை பீரோவுக்குள்ளிருந்து வரச் சொன்னேன் என்றார் சக்லைன்.

காதல் இருந்தால்.. அரை சதம் போடு!

காதல் இருந்தால்.. அரை சதம் போடு!

இதேபோல எனது மனைவிக்கும், எனக்கும் இடையே நடந்த இன்னொரு சுவாரஸ்யம் உள்ளது. நி்யூசிலாந்தில் நாங்கள் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எனது மனைவி என்னிடம் உங்களுக்கு என் மீது உண்மையிலேயே காதல் இருந்தால் இப்போட்டியில் அரை சதம் அடிக்க வேண்டும் என்றார். நானும் உற்சாகமாகி பொறுமையாக ஆட ஆரம்பித்தேன். ஒரு வழியாக அரை சதமும் போட்டு விட்டேன். அடுத்தும் தொடர்ந்து ஆடினேன். அன்றைய நாளை 70 ரன்களில் முடித்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.

நிறைய காதல் இருந்தால் செஞ்சுரி போடு!

நிறைய காதல் இருந்தால் செஞ்சுரி போடு!

எனது மனைவிக்கு மகிழ்ச்சியாகி விட்டது. ஆனாலும் அவர், அன்று இரவு என்னிடம், உங்களுக்கு என் மீது நிறைய காதல் இருந்தால் நாளை செஞ்சுரி அடிக்க வேண்டும் என்றார். எனக்கோ முடியுமா என்ற சந்தேகம். இருந்தாலும் அடுத்த நாள் ஆட்டத்தை ஆரம்பித்த நான் மிக மிக பொறுமையாக ஆடினேன். நிறைய பந்துகளைச் சாப்பிட்டு 99 ரன்கள் வரை வந்து விட்டேன். அதே 99 ரன்னோடு அடுத்த முக்கால் மணி நேரத்தை ஓட்டினேன். நல்ல வேளையாக நாதன் ஆஸ்லே போட்ட பந்தை சிறப்பாக அடித்த ஒரு ரன்னை எடுத்து முடித்து ஒரு வழியாக செஞ்சுரி போட்டேன் என்று கூறிச் சிரித்தார் சக்லைன்.

Story first published: Tuesday, February 24, 2015, 12:05 [IST]
Other articles published on Feb 24, 2015
English summary
As the debate over whether wives and girlfriends should travel with players or not continues, former Pakistan spinner Saqlain Mushtaq has revealed that in the 1999 World Cup, he had sneaked his wife into hotels and hid her in the closet when the manager or the coach came knocking.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X