For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிரடி அப்ரிடியை உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு பார்க்க முடியாது...!

லாகூர்: பாகிஸ்தானின் அதிரடி ஆல் ரவுண்டரான ஷாஹித் அப்ரிடி உலகக் கோப்பைப் போட்டிகளுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

இதற்கான அறிவிப்பை நேற்று அவர் லாகூரில் வெளியிட்டார். 2015 உலகக் கோப்பைப் போட்டிகளுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார் அப்ரிடி.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

34 வயது அப்ரிடி

34 வயது அப்ரிடி

34 வயதாகும் அப்ரிடி, உலக அளவில் தலை சிறந்த ஆல் ரவுண்டர்களில் முக்கியமானவர். தனது ஓய்வு குறித்து டிவிட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

திருப்திகரமாக விலகுகிறேன்

திருப்திகரமாக விலகுகிறேன்

அதில், எனது பயணம் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளது. ஆனால் நான் திருப்திகரமாக உணர்கிறேன். விலகுவது என்பது எனது சொந்த முடிவாகும்.

கஷ்டம்தான்

கஷ்டம்தான்

இந்த முடிவு கஷ்டமானதுதான். இருப்பினும் அணியின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன்.

18 வருட கனவு

18 வருட கனவு

எனது 18 வருட கனவு பாகிஸ்தான் அணிக்காக இருந்தது. எனது விலகலால் பல இளம் திறமைகளுக்கு வழி கிடைக்கும். அவர்களது கனவும் நனவாகும்.

சாதனைகள் பேசும்

சாதனைகள் பேசும்

எனது சாதனைகள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன. ஒரு நாள் போட்டியில் அதி விரைவாக சதம் எடுத்தவன் என்ற சாதனையை இழந்தது மட்டுமே வருத்தம் தருகிறது.

நன்றி.. நன்றி.. நன்றி

நன்றி.. நன்றி.. நன்றி

இத்தனை காலமாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அனைவரையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார் அப்ரிடி.

2011 உலகக் கோப்பை கேப்டன்

2011 உலகக் கோப்பை கேப்டன்

அப்ரிதி 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டனாக இருந்தவர். அப்போது பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை வந்து அந்தப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

389 ஒரு நாள் போட்டிகள்

389 ஒரு நாள் போட்டிகள்

அப்ரிடி 389 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996ம் ஆண்டு தான் அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக, 37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தவர். அந்த சாதனை 17 வருடமாக முறியடிக்காமல் இருந்தது. கடந்த ஜனவரி மாதம்தான் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் அந்த சாதனையை முறியடித்தார்.

7870 ரன்கள்

7870 ரன்கள்

அப்ரிடியின் பேட்டிங் சராசரி 23.49 ஆகும்.மொத்தம் 7870 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 116.29 ஆகும். 391 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் அப்ரிடி. இவரது எக்கானமி ரேட் 4.62 ஆகும்.

டெஸ்ட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வு

டெஸ்ட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வு

ஏற்கனவே, 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அப்ரிடி ஓய்வு பெற்று விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, December 22, 2014, 8:16 [IST]
Other articles published on Dec 22, 2014
English summary
Pakistan's veteran all-rounder Shahid Afridi Sunday announced he will retire from One-Day International (ODI) cricket after the 2015 World Cup to be held February 14-March 29 in Australia and New Zealand.
 "My journey has seen many ups and downs but I am feeling satisfied that I am leaving on my own terms," Afridi wrote on Twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X