For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

காரித் துப்பி வாய்ச் சண்டை போட்ட கால்பந்து வீரருக்குத் தடை!

நியூகேஸில், இங்கிலாந்து: கால்பந்துப் போட்டியின்போது எதிர் அணி வீரர் மீது எச்சில் துப்பிய வீரருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இபிஎல் எனப்படும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் என்ற கால்பந்துத் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மான்செஸ்டர் யுனைட்டெட் அணியும், நியூகேஸில் யுனைட்டெட் அணியும் மோதின.

அப்போது முதல் பாதி ஆட்டத்தின் நிறைவு நெருங்கிய சமயத்தில் இரு அணி வீரர்களிடையே மோதல் வெடித்தது. மான்செஸ்டர் வீரர் ஜானி இவான்ஸ் மற்றும் நியூகேஸில் வீரர் பாபிஸ் சிஸ்ஸே ஆகியோருக்கு இடையே மோதல் வெடித்தது. சிஸ்ஸே வைத்திருந்த பந்தை இவான்ஸ் பறிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை மூண்டது.

Soccer player banned for 6 matches

அடுத்து யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் சரமாரியாக ஒருவர் முகத்தின் மீது இன்னொரு எச்சிலைத் துப்பி உமிழ்ந்தனர். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடுவர் உடனடியாக சிஸ்ஸேவுக்கு ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்பக்பட்டது. இதில் முதலில் சிஸ்ஸேதான் எச்சிலைத் துப்பினார் என்பது தெரிய வந்தது. பதிலுக்குத்தான் இவான்ஸ் பதிலுக்குத் துப்பியுள்ளார்.

இதையடுத்து சிஸ்ஸேவுக்கு தற்போது 7 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல இவான்ஸுக்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

எச்சில் துப்புவது, அடித்துக் கொள்வது, கடிப்பது என கால்பந்து விளையாட்டில் இப்படிப்பட்ட சின்னப்புளத்தனம் வெகு பிரசித்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 6, 2015, 13:24 [IST]
Other articles published on Mar 6, 2015
English summary
Jonny Evans and Papiss Cissé appeared to spit at each other during Newcastle's defeat to Manchester United. Now Cisse has been banned for 6 matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X