For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளையாட்டு உலகின் பொற்காலம் 2016.. சோஷியல் மீடியாவில் இதுவே பேச்சு

By Veera Kumar

டெல்லி: 2016ம் ஆண்டு இந்திய விளையாட்டுத்துறைக்கு ஒரு ஏற்றமிகு காலம் என்றே கூறலாம். கிரிக்கெட் மட்டுமின்றி வேறு சில விளையாட்டுகளும் இந்த ஆண்டு, அதிக ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றதால், அது தொடர்பான #Rio2016 ஹேஷ்டேக் இவ்வாண்டில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விளையாட்டு தொடர்பான ஹேஷ்டேக்கானது.

அதேபோல, #WT20 என்ற ஹேஷ்டேக் மார்ச் 15 முதல் ஏப்ரல் 3வரை அதிகம் டிரெண்டிங்கில் இருந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

அரையிறுதியில் தோல்வி

அரையிறுதியில் தோல்வி

டி20 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதி வரை முன்னேறி, மே.இ.தீவுகளிடம் தோல்வியை தழுவியது நினைவிருக்கலாம். பிறகு இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

விராட் கோஹ்லி அபாரம்

விராட் கோஹ்லி அபாரம்

இதே உலக கோப்பையின்போது, இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியின்போது #IndvsPak என்ற ஹேஷ்டேக்கில் கருத்து கூறினர் நெட்டிசன்கள். அது விளையாட்டு வட்டாரத்தில் 3வது இடம் பிடித்த ஹேஷ்டேக்காக மாறியுள்ளது. அந்த போட்டியில் விராட் கோஹ்லி 55 ரன்கள் விளாசி இந்திய வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து

சிந்து

ரியோ ஒலிம்பிக்கின் பெண்கள் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்துவும், ஸ்பெயினின் மரினும் மோதினர். அப்போது அமிதாப்பச்சன் முதல், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரை #PVSindhu என்ற ஹேஷ்டேக்கில் டிவிட்டியதால் அது இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 9வது ஹேஷ்டேக்காக மாறிப்போயுள்ளது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

இதேபோல இந்தியா, மே.இ.தீவுகள் நடுவேயான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி, முன்னதாக நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிகளும் பெருமளவுக்கு ரசிகர்களை ஈர்த்து சோஷியல் மீடியாவில் தாக்கம் ஏற்படுத்தின.

Story first published: Tuesday, December 13, 2016, 11:18 [IST]
Other articles published on Dec 13, 2016
English summary
2016 was a year featuring some of the biggest sporting events and achievements in India and around the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X