For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்குப் போய் ஆடுவதில் என்ன தப்பு?.. கேட்கிறது இலங்கை!

கொழும்பு: இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று எடுத்த முடிவு சரியானதே என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இது வாரியத்தின் செயற்குழு ஒட்டுமொத்தமாக, ஏகோபித்து எடுத்த முடிவு என்றும் அது கூறியுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளால்

மேற்கு இந்தியத் தீவுகளால்

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே ஒரு நாள், டெஸ்ட் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டி அடங்கிய தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாதியில் கிளம்பிய மேற்கு இந்தியத் தீவுகள்

பாதியில் கிளம்பிய மேற்கு இந்தியத் தீவுகள்

ஆனால் சம்பளப் பிரச்சினை காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும், நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டது மேற்கு இந்தியத் தீவுகள்.

இலங்கைக்கு அவசர அழைப்பு

இலங்கைக்கு அவசர அழைப்பு

இதையடுத்து, இதனால் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட இலங்கை அணியை இந்தியாவந்து குறுகிய தொடர் ஒன்றில் ஆடுமாறு அழைப்பு விடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அதை இலங்கையும் உடனடியாக ஏற்றுக் கொண்டது.

அடுத்த மாதம் வருகை

அடுத்த மாதம் வருகை

இதன்படி அடுத்த மாதம் இலங்கை அணி இந்தியா வருகிறது. ஆனால் இலங்கையின் இந்த முடிவுக்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது

குமார் சங்கக்கரா அதிருப்தி

குமார் சங்கக்கரா அதிருப்தி

மூத்த வீரரான குமார் சங்கக்கரா, இந்த முடிவு சரியானதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது இலங்கை வீரர்களுக்கு உடல் தகுதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது இந்த சமயத்தி்ல் இந்தியாவுக்குப் போனால் இ்ந்தத் திட்டம் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வாரியத்திற்குள்ளும் மோதல்

வாரியத்திற்குள்ளும் மோதல்

அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவைச் சேர்ந்த ஒருவரும் கூட இந்த திடீர் முடிவை ஆட்சேபித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன

செயலாளரின் தன்னிச்சையான முடிவு

செயலாளரின் தன்னிச்சையான முடிவு

இந்த தன்னிச்சையான முடிவை இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் நிஷாந்த ரணதுங்காதன் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

5 ஒரு நாள் போட்டிகள்

5 ஒரு நாள் போட்டிகள்

இந்தியாவும், இலங்கையும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 21, 2014, 14:41 [IST]
Other articles published on Oct 21, 2014
English summary
Sri Lanka Cricket has defended its decision to send the national team for a tour of India next month amid criticism coming from certain quarters, saying that it was taken at the best interest of the game. SLC said it was a collective decision of its executive committee to accept India's invitation for a short tour. After Kumar Sangakkara expressed doubts over the wisdom of the decision claiming that it had caused interruption to the fitness programme the team was undergoing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X