For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை பைனல் 'டை'யானால், சூப்பர் ஓவருக்கு அனுமதி: ஐசிசி அறிவிப்பு

By Veera Kumar

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி டையில் முடிந்தால், சூப்பர் ஓவர் மூலம் சாம்பியனை தேர்ந்தெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம், 14ம்தேதி தொடங்கி மார்ச் 29ம்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியின்போது சில விதிமுறைகளை அமல்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.

ஐசிசி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: உலக கோப்பையின் லீக் சுற்றுக்களிலோ அல்லது காலிறுதி, அரையிறுதி போட்டிகளின்போதோ, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடைமுறை பயன்படுத்தப்பட மாட்டாது.

லீக் புள்ளிகள்

லீக் புள்ளிகள்

காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் ஏதாவது டிராவில் முடிவடைந்தால், லீக் ஆட்டங்களில் அவ்விரு அணிகளில் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்றுள்ளதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

பைனலில்..

பைனலில்..

அதேநேரம் இறுதி போட்டியின்போது ஆட்டம் டையில் முடிவடைந்தால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவர் மூலமே யார் சாம்பியன் என்பது முடிவு செய்யப்படும். எனவே போட்டி டையில் முடிவடைந்தால் இரு அணிகள் கோப்பையை பகிர்ந்து கொள்ள தேவையில்லை.

மெதுவாக ஓவர்கள் வீசியவர்கள் கவனத்திற்கு...

மெதுவாக ஓவர்கள் வீசியவர்கள் கவனத்திற்கு...

மேலும், உலக கோப்பை தொடருக்கு முன்பாக, நடந்த போட்டியில், எந்த ஒரு அணியின் கேப்டன் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அது உலக கோப்பைக்கு பொருந்தாது. மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக எந்த ஒரு கேப்டனாவது சஸ்பெண்ட்டுக்கு உள்ளாகியிருந்தாலும்கூட, உலக கோப்பை போட்டியில் அவர் விளையாட தடை கிடையாது.

உலக கோப்பையில் ஒழுங்கா இருக்கனும்..

உலக கோப்பையில் ஒழுங்கா இருக்கனும்..

ஆனால் உலக கோப்பை தொடரின்போது மெதுவாக ஓவர் வீசும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அதை தடுக்க முடியாது. இவ்வாறு ஐசிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ரூல்ஸ் மாற்றம்

ரூல்ஸ் மாற்றம்

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான அறிவிப்பில், உலக கோப்பை கிரிக்கெட்டில், பைனல் உட்பட எந்த ஒரு போட்டியிலும் சூப்பர் ஓவருக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 29, 2015, 13:29 [IST]
Other articles published on Jan 29, 2015
English summary
Super Over will be used to decide the winner of ICC World Cup 2015 final on March 29 at Melbourne Cricket Ground (MCG), in case of a tie, the International Cricket Council (ICC) confirmed today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X