For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக் 2016: திருப்பூரில் இருந்து பதக்கம் வெல்லப் போகும் தருண் அய்யாசாமிக்கு நிதி உதவி

By Mayura Akilan

திருப்பூர்: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள திருப்பூரைச் சேர்ந்த தடகள வீரரான தருணுக்கு,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பாக ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் அடுத்த மாதம் 5ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர்கள், சுதந்திரத்துக்கு பிறகு பதக்கம் வென்றதில்லை.

2012ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தனர். இம்முறை ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் இருந்து அதிக பட்சமாக 16 வீராங்கனைகள் உட்பட 36 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் ஆடவர் பிரிவில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜீவ் ஆகிய நால்வர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தருண் அய்யாசாமி, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் தமிழ் மண்ணை சேர்ந்தவர்கள்

400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தருண் அய்யாச்சாமி பங்கேற்க உள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்,தடகளத்தில் மாநில அளவில் 8 சாதனைகளும்,தேசிய அளவில் 6 சாதனைகளையும் படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வரும் இவர், பயிற்சி செலவுகளுக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனை அறிந்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தருண் அய்யாச்சாமிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி அளித்து உதவியுள்ளனர்.

தருண் அய்யாச்சாமி

தருண் அய்யாச்சாமி

தருண் அய்யாசாமி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி, ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அய்யாசாமி. தாயார் பூங்கொடி. தருணின் ஏழு வயதில் தந்தை இறந்துவிட்டார். தாயார், தனியார் பள்ளி ஆசிரியர். இளம் வயதில் ஆரம்பித்த தடகள ஆர்வம் தற்போது தருணை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

விளையாட்டில் ஆர்வம்

விளையாட்டில் ஆர்வம்

தருண் தனது பள்ளிப் பருவத்தில் கோ-கோ விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மாநில அளவிலான போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். குழு விளையாட்டில் தனது தனிப்பட்ட திறன் வெளியே தெரியாது என கருதிய தருண் 10ம் வகுப்பு படிக்கும் போதுதான் ஓட்டப்பந்தயத்தின் மீது தனது கவனத்தை திருப்பினார்.

தங்கம் வென்று அசத்தல்

தங்கம் வென்று அசத்தல்

திருப்பூரை சேர்ந்த தடகள பயிற்சியாளர் ஜே.அழகேசனிடம் முறைப்படி பயிற்சி பெற்று தன்னை மெருகேற்றினார். 2012 முதல் 2014 வரை உள்ள காலகட்டத்தில் மாநில தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகள் தங்கம் வென்று அசத்தினார்.

சாதனை படைத்த வீரர்

சாதனை படைத்த வீரர்

2014ல் மாநில தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 21.4 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 48.6 விநாடிகளிலும் தருண் இலக்கை கடந்தது தற்போது வரை சாதனையாக உள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி

தெற்காசிய விளையாட்டுப் போட்டி

இதே போன்று மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் தருண் படைத்துள்ளார். தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார். 2016ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தருண் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளார்.

தாயின் கனவை நிறைவேற்றிய தருண்

தாயின் கனவை நிறைவேற்றிய தருண்

மகன் ஒலிம்பிக்கில் ஓடுவதை நான் பார்க்க வேண்டும் என்பது கடந்த பிப்ரவரி மாதம் தெற்காசியப் போட்டியில் தருண் அய்யாசாமி தங்கம் வென்றபோது, அவரது தாய் பூங்கொடி சொன்ன வார்த்தைகள். இன்றைக்கு அது பலித்துள்ளது. ஒரு தாயின் கனவை தனயன் நிறைவேற்றி யுள்ளார்.

ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர்

வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் இது. குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இத்தனை நாள் பட்ட துயரங்கள் இதனால், கரைந்துவிட்டன. தருண் தடகளப்போட்டிகளில் பங்கேற்க சென்றால், அந்த மாதத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கூடுதல் செலவாகும். அன்றைக்கு பட்டசிரமங்கள் எல்லாம், இன்றைக்கு இந்த வெற்றிமூலம் நீங்கியுள்ளது என்று அவரது தாயார் பூங்கொடி கூறியுள்ளார்.

பதக்கம் வெல்வோம்

பதக்கம் வெல்வோம்

ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி சவாலாக இருக்கும் என கருதுகிறோம். இம்முறை நிச்சயம் இறுதி சுற்றில் கால்பதித்து தங்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் தருண் அய்யாசாமி.

Story first published: Saturday, July 23, 2016, 15:53 [IST]
Other articles published on Jul 23, 2016
English summary
Tirupur Exporters Association has given a sum of Rs1 lakh to Dharun Ayyasamy, an athlete from Ravuthampalayam village near Avinashi in Tirupur District who is participating in the coming Olympics to be held in Rio De Janeiro in Brazil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X