For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் பூங்கொடிகள்... ஆறு பேரு.. அதுல அசத்தப் போவது யாரு!

விம்பிள்டன், லண்டன்: கிரிக்கெட்டுக்கு லார்ட்ஸ், கால்பந்துக்குப் பீலே என்பது போல டென்னிஸுக்குப் புனிதம் விம்பிள்டன். இந்த ஆண்டு சீசன் தொடங்கி விட்டது.. மழையுடன். இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் 6 இளம் வீராங்கனைகள்தான் ரசிகர்களின் கண்களில் அதிகம் விழுந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் பெரிய தலைகள் யாராக இருக்கும் என்ற ஆர்வமும் இன்னொரு பக்கம் ஏகமாகவே காணப்படுகிறது.

பிரபலமான போட்டிகளில் பிரபலங்கள் அடிபடுவதும், புதுமுகங்கள் உச்சத்திற்குப் போவதும் காலம் காலமாக நடப்பதுதான் என்றாலும் இந்த முறை ஆறு இளம் வீராங்கனைகள் முக்கிய வீராங்கனைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனா கொஞ்சு

அனா கொஞ்சு

இந்த ஆறு பேரில் முக்கியமானவர் அனா கொஞ்சுதான். இந்த வீராங்கனைக்கு வயது ஜஸ்ட் 18தான். குரோஷியாவைச் சேர்ந்தவர். இளம் புயலாக இவர் வர்ணிக்கப்படுகிறார்.

16 வயதினிலே

16 வயதினிலே

16 வயதிலேயே தனது வருகையை அபாரமாக வெளிப்படுத்தியவர் அனா கொஞ்சு. 16 வயதில் இவர் டாப் 100 ரேங்குக்குள் வந்து அசத்தியவர். கோர்ட்டுக்குள் புகுந்து விட்டால் புயலாக மாறி விடுகிறார் கொஞ்சு.

பேருதான் கொஞ்சு.!

பேருதான் கொஞ்சு.!

இவரது பேருதான் கொஞ்சு.. என்று ஜில்லென இருக்கிறது. ஆனால் இவரிடம் சிக்கும் எதிராளிகளை "நஞ்சு" போக வைத்து விடுகிறார் அனா கொஞ்சு தனது அபார ஆட்டத்தால். தற்போது உலகத் தரி வரிசையில் 107வது இடத்தில் இருக்கிறார் அனா கொஞ்சு.

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்

ஒரு நாளைக்கு இவர் ஆறு மணி நேரம் பிராக்டிஸ் செய்கிறாராம். புல் எனர்ஜியோடுதான் எப்போதும் இருப்பேன். அதுதான் எனக்குத் தேவை. அதைத்தான் நான் விரும்புகிறேன். அப்போதுதான் எதிராளிகளை பந்தாட முடியும் என்று சிரித்தபடி கூறுகிறார் கொஞ்சு.

ஜெலீனா ஓஸ்டெபங்கா

ஜெலீனா ஓஸ்டெபங்கா

இவருக்கு வயது 19. லாத்வியா நாட்டைச் சேர்ந்தவர். உலகத் தரவரிசையில் 36வகது இடத்தில் இருக்கிறார். கத்தார் ஓபன் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறியவர். இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியன் ஆன பெட்ரா கிவிட்டோவாவை வீழ்த்தி அசத்தியவர்.

லூயிசா சிரிகோ

லூயிசா சிரிகோ

20 வயதாகும் லூயிசா அமெரிக்காவைச் சேர்ந்தவர் 74வது ரேங்க்கில் இருப்பவர். நியூயார்க் புயல் இவர். ஆட்டத்தில் இறங்கி விட்டால் பிரித்து மேய்ந்து விடுகிறார். களிமண் தரையில் விளையாடுவது இவருக்கு மிகவும் வசதியானது. மாட்ரிட் ஓபன் போட்டியில் அரை இறுதி வரை வந்தவர். வழியில் அனா இவனோவிக்கை வீழ்த்தியவர்.

மோனிகா பியூக்

மோனிகா பியூக்

உலகத் தரவரிசையில் 43வது இடத்தில் இருக்கிறார் மோனிகா. பியூர்டாரிகோ நாட்டைச் சேர்ந்தவர். 22 வயதாகும் இவர் கடந்த வாரம் ஈஸ்ட்போர்ன் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர். ஸ்டெபிகிராப்பைப் பார்த்து வளர்ந்தவர். அவர்தான் இவருக்கு மானசீக குருவும் கூட. ஸ்டெபி போலவே விளையாடவும் விரும்புகிறாராம்.

கேத்தி ஸ்வான்

கேத்தி ஸ்வான்

17 வயதாகும் கேத்தி ஸ்வான் பிரிட்டன் வீராங்கனை. 441வது தரவரிசையில் இருக்கும் இவர் பிரிஸ்டலில் பிறந்து வளர்ந்தவர். கான்சாஸில் தற்போது வசித்து வருகிறார். பிரிட்டனின் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்று கூறும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வரும் வீராங்கனை இவர். 7 வயது முதல் டென்னிஸ் ஆடி வரும் பாவை. ஜூனியர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 15 வயதில் இறுதிப் போட்டியில் ஆடிய அதிசய வீராங்கனை. ஆனால் விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே அவுட்டாகி விட்டார் கேத்தி.

விக்கி துவால்

விக்கி துவால்

20 வயதாகும் விக்கி துவால் அமெரிக்க வீராங்கனை. 568வது ரேங்க்கில் இருக்கிறார். அடுத்த செரீனா வில்லியம்ஸ் என்று இப்போதே பலரும் இவரைக் கூற ஆரம்பித்து விட்டனர். ஹெய்த்தியில் சிறு வயதில் டென்னிஸ் ஆடக் கற்றுக் கொண்டார். 2010ல் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர் துவால். ஆனாலும் மீண்டு வந்து டென்னிஸைப் பிடித்துக் கொண்டார். ஜாஸ், பாலட் என்று சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு இப்போது டென்னிஸ்தான் ஒரே எனர்ஜி.

Story first published: Wednesday, June 29, 2016, 17:06 [IST]
Other articles published on Jun 29, 2016
English summary
In this year Wimbldon series, six young women player are in the eye of the fans for their powerful talent.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X