For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேசாம 'பூஸ்ட்'டை நிறுத்திட்டு 'காம்ப்ளான்' குடிக்கலாம் டோணி.. பவுலர்கள் உயரமாக இருப்பதாக சொல்கிறார்!

By Veera Kumar

பெர்த்: இங்கிலாந்து பவுலர்களின் உயரம் காரணமாக பந்தை நன்கு வீசி எங்களை ஆட்டம் காணச் செய்ய முடிந்தது என்று 'தனது பாணியில்' தோல்விக்கு விளக்கம் அளித்தார் இந்திய கேப்டன் டோணி.

இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற வாழ்வா, சாவா போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. இதன்பிறகு டிவி சேனலிடம் பேசிய டோணி கூறிய வார்த்தைகள் இவைதான்:

These conditions more suitable for taller English bowlers, says Dhoni

அவங்க நல்லா பந்து போட்டாங்க, எங்க பேட்ஸ்மேன்கள் தப்பான ஷாட் செலக்ஷனை தேர்ந்தெடுத்து அவுட் ஆனாங்க. இதுபோன்ற (வேகப்பந்துக்கு சாதகமான) பிட்சில் உயரமாக உள்ள பவுலர்களுக்கு நல்ல வாய்ப்பு. இங்கிலாந்து பவுலர்கள் உயரமாக இருந்ததால் அவர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து எகிறச் செய்ய முடிந்தது. இதனால்தான் நாங்கள் தடுமாறிவிட்டோம்.

இந்தியாவின் கடைசிகட்ட பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது தொடர்ந்துவருகிறது. இந்த நிலை மாற வேண்டும். எங்களுக்கு இப்போ ஓய்வு தேவை. டெஸ்ட் போட்டியின் சிறப்பான ஆட்டத்திறனை ஒருநாள் போட்டிக்கும் மாற்ற வேண்டும். இவ்வாறு டோணி கூறினார்.

ஆமா, டோணியாரே, பிரிஸ்பேனில் இதைவிட மட்டமா இங்கிலாந்துக்கு எதிரா தோற்றீங்களே, அப்போவும் பந்து எகிறித்தான் வந்துச்சா? ஆஸ்திரேலியாவில் சிறப்பா பந்து போட உயரமாதான் இருக்கனும்னா, நம்ம பவுலர்களுக்கு காம்ப்ளான் வாங்கி கொடுக்க அணி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கலாமே?

Story first published: Friday, January 30, 2015, 17:43 [IST]
Other articles published on Jan 30, 2015
English summary
Few deliveries misbehaved but these conditions more suitable for (taller) English bowlers who hit deck hard says MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X