For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் யார் தெரியுமா?

இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

By Karthikeyan

மும்பை: 2016- ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

TOISA: Sindhu bags sportsperson of the year award.

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாக்கி வீரர் அஜித் பால் சிங்குக்கு வழங்கப்பட்டது. மல்யுத்தப் பிரிவில் சிறந்த நபருக்கான விருதை ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் வென்றுள்ளார். ஜிம்னாஸ்டிக் பிரிவில் சிறந்த வீரர் விருதை, தீபா கர்மகர் வென்றார். சிறந்த பாக்ஸருக்கான விருது விகாஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாக்ஸருக்கான விருது, விஜேந்தர் சிங் பெற்றுள்ளார். சிறந்த பயிற்சியாளருக்கான விருது, சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் பிஸ்வேஷர் நந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தீபா மாலிக், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, வருண்சிங் பாட்டி ஆகியோருக்கு பாரா ஒலிம்பிக் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த அணிக்கான விருது, ஜூனியர் ஹாக்கி அணிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Story first published: Tuesday, March 21, 2017, 18:43 [IST]
Other articles published on Mar 21, 2017
English summary
Ace shuttler and Rio Olympics silver medalist PV Sindhu was on Monday (March 20) bestowed the Best Sportsperson of the Year award at the Times of India Sports Awards (TOISA) here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X