For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்வே செஸ்.. சாம்பியன் பட்டத்தை நெருங்கும் விஸ்வநாதன் ஆனந்த்.. 8 வது சுற்றில் அபார வெற்றி..

ஸ்டாவெஞ்சர்: நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றில் நார்வே வீரர் ஜோன் லுத்விக் ஹாமர் என்பவரை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்துக்கான மோதலில் டோபலோவை சந்திக்கவிருக்கிறார்.

ஹாமருக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக எந்தவித தொடக்கத்தையும் முன்னெடுக்காத ஆனந்த் சாதாரணமாகவே தொடங்கினார். ஆனால் ஹாமர் தனது காய்களின் நிலைகளை அதிமதிப்பீடு செய்து சில அதிரடி நகர்த்தல்களை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்தார். ஆனந்த் மிகவும் சாதாரணமாகவே அவரது மூவ்களை எதிர்கொண்டார்.

Viswanathan Anand beats Jon Ludvig Hammer at Norway Chess, inches closer to Championship

37-வது மூவில் ஆனந்த் தனது குயினை, ஹாமரின் யானையைக் குறிவைத்து நகர்த்த ஹாமர் ஆட்டத்தைக் கைவிட்டார். ஆனந்த் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் பல்கேரிய வீரர் வெசலின் டோபலோவை சந்திக்கவிருக்கிறார்

டோபலோவ், தனது 8-வது சுற்று ஆட்டத்தில் ஆனிஷ் கிரி என்பவரிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால் 6 புள்ளிகளில் இருக்கிறார், ஆனந்த் 8-வது சுற்றில் ஹாமரை வீழ்த்தியதால் 5.5 புள்ளிகளுடன் உள்ளார்.

எனவே அடுத்ததாக நடைபெறும் டோபலோவ்-ஆனந்த் போட்டி சாம்பியன் பட்டத்துக்கான மோதலாக அமைகிறது. இந்த ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் ஆனந்த் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் டோபலோவ் டிராவுக்காக ஆடினாலே போதும், ஆனால் ஆனந்த் வெற்றிக்காக ஆடினால் தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்.

ஆனந்த்-டோபலோவ் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Story first published: Friday, June 26, 2015, 8:31 [IST]
Other articles published on Jun 26, 2015
English summary
Viswanathan Anand beats Norwaygion Jon Ludvig Hammer at Norway Chess, inches closer to Championship today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X