For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வண்டி பஞ்சராகி….வாடகை டாக்சியில் ஏறி…. சச்சின் டெண்டுல்கரின் “கிரிக்கெட்” காதல்!

மும்பை: சச்சின் டெண்டுல்கர்....கிரிக்கெட் ரசிகர் ஒவ்வொருவரின் நினைவிலும் நீங்காமல் ஒலிக்கும் ஒரு பெயர்.

அவருடைய கிரிக்கெட் மீதான அபிமானத்தினால், ஒருசமயம் வாடகை டாக்சியில் மைதானத்திற்கு செல்ல நேரிட்டதாக கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

நேரத்தில் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக தான் அந்த டாக்சி பயணத்தை மேற்கொண்டதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

நாக்பூர் கிரிக்கெட் போட்டி:

நாக்பூர் கிரிக்கெட் போட்டி:

"அன்றைய தினத்தில் என்னால் தொடர்ந்து காரை ஓட்ட இயலவில்லை. என்னுடைய உடல் பாதிப்பிற்கு பிறகு நாக்பூரில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி அது.

6.30 மணிக்கு விமானம்:

6.30 மணிக்கு விமானம்:

காலையில் 6.30 மணிக்கே என்னுடைய விமானம் என்பதால், அதிகாலையிலேயே நான் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.

பழுதடைந்த கார்:

பழுதடைந்த கார்:

ஒருநாள் போட்டிக்கான பயணத்திற்காக காரில் விமானநிலையத்திற்கு காலை 5.30 அளவில் விரைந்த போது திடீரென்று என்னுடைய கார் வழியிலேயே பழுதடைந்தது.

வாடகை டாக்சியில் பயணம்:

வாடகை டாக்சியில் பயணம்:

அதனால், நான் ஒரு வாடகை டாக்சியை அமர்த்திக் கொண்டு விமான நிலையத்தினைச் சென்றடைந்தேன். டாக்சி கிடைக்குமோ என்னவோ அந்த நேரத்தில் என்று கூட பயந்துவிட்டேன்" என்று ஸ்மாஸில் நடைபெற்ற ரூப்டாப் கோ கார்டிங் சர்க்யூட் தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சவாலான நாள்:

சவாலான நாள்:

"ரிக்‌ஷாவும், டாக்சியும் சேர்ந்த அந்த வண்டியில் என்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்றேன். என் வாழ்க்கையிலேயே சவாலான நாள் அது" என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

Story first published: Saturday, October 18, 2014, 16:44 [IST]
Other articles published on Oct 18, 2014
English summary
Commitment to his game of cricket had once compelled Sachin Tendulkar to call a private taxi in order to reach a match venue on time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X