மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்: யுவராஜ் நம்பிக்கை

By:

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியில் தாம் மீண்டும் இடம்பிடிப்பேன் என்று யுவராஜ்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இருந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை பெற்ற யுவராஜ் கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து தொடருக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.

இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவதை லட்சியமாக கொண்ட யுவராஜ் மேற்கிந்திய தீவு ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடினார்.

இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ்சிங், ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன். அது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் கடுமையாக போராடக் கூடியவன். நிச்சயம் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என்றார்.

English summary
Yuvraj Singh on Friday said that he hoped to get picked in the ODI team.
Please Wait while comments are loading...

Videos