For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் 4 அமைச்சர்கள் திடீர் பதவி விலகல்! சிறிசேன அரசுக்கு நெருக்கடி!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீரென பதவி விலகி உள்ளனர். இதனால் அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசில் அமைச்சர்களாக இருந்த டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, சி.பி.ரத்னாயக்க, மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

4 SLFP Ministers resign

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படாத காரணத்தினால் தாங்கள் பதவி விலக தீர்மானித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயல்பாடுகள் காரணமாக அதிபர் மைத்ரிபால சிறிசேன பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனக் கூறியுள்ள டிலான் பெரேரா, தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று பதவி விலகிய அமைச்சர்கள் 4 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 4 அமைச்சர்கள் ஒரே நேரத்தில் திடீரென பதவி விலகியதால் அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
SLFP MPs Dilan Perera, Mahinda Yapa Abeywardana, C.B. Rathnayake and Pavithra Wanniarachchi who accepted ministerial portfolios of the current government have resigned from their positions today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X