For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பியாவில் தடை வருகிறது!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: சட்டவிரோத மீன்பிடித்தலை தடுக்காத இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளில் சட்டவிரோத மீன்பிடித்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இலங்கையுடனும் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தியது.

EU to ban fish caught by vessels flagged in Sri Lanka

கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இப்பேச்சுவார்த்தையில் இலங்கையின் நடவடிக்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பிஜி, பனாமா உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனைகளை ஏற்று சட்டவிரோத மீன்பிடித்தலை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

English summary
The European Union (EU) has decided to ban the import of fisheries products caught by vessels flagged in Sri Lanka from entering the EU market after three months time from now, the EU office said here in a statement Tuesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X