For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் வட மாகாணங்களுக்கு வெளிநாட்டினர் போக கட்டுப்பாடு: இலங்கை திடீர் அடாவடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு செல்ல வேண்டுமானால், வெளிநாட்டுக்காரர்கள் சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என்று இலங்கை புது உத்தரவு போட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வானிகசூர்யா அளித்த பேட்டி: தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகம் இணைந்து புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளன. அதன்படி இலங்கைக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் வடக்கு மாகாணங்களுக்கு பயணப்பட வேண்டுமால் அதற்கு சிறப்பு அனுமதியை பெற வேண்டும்.

Foreign nationals would need prior permission to Sri Lanka’s North

பாஸ்போர்ட்டும் இலங்கை விசாவும் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று நினைத்துவிடக்கூடாது. வடக்கு மாகாணங்களுக்கு செல்வோர் தாங்கள் எதற்காக அங்கு செல்கிறோம், நோக்கம் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்ட பிறகுதான் அனுமதி வழங்க முடியும்.

எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான ஆபத்து உள்ளபோது, நாங்கள் பொறுமையாக இருக்க முடியாது. சில வெளிநாட்டுக்காரர்கள், சிறுபான்மை தமிழர்களை குழப்பிவருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலங்கையின் இந்த உத்தரவால் வட மாகாணங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lanka’s army imposed new restrictions on foreigners visiting the country’s former war zone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X